அன்னையைப் பணிவோம்!
இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களைத் தன்
அருள்பார்வையால் காத்த அன்னையைப் பணிவோம்.
பொருளே வாழ்க்கை என கானல் நீரைத்தேடியவர் மேல்
அருள் மழை பொழிந்த அன்னையைப் பணிவோம்.
துன்பம் வந்த போதெல்லாம் துவண்டு விடாமல் நம்
துயர் துடைத்துய்வித்த அன்னையைப் பணிவோம்.
பொறாமை என்னும் நோய் பீடித்தபோதெல்லாம்
பொறுமையாய்க் காத்த அன்னையைப் பணிவோம் .
இரவும், பகலும் அவளை மறந்து அலைந்த போது
அருள் கரம் காட்டிய அன்னையைப் பணிவோம்.
கால பயம் நீங்கிட காலனை காலால் உதைத்து
கனகமணியாய் விளங்கும் அன்னையைப் பணிவோம்
தேறும் வழி தெரியாது தவித்தழுத போதெல்லாம்
தஞ்சம் என்று அருளிய அன்னையைப் பணிவோம்.
வல்வினைகளை நீக்கி , வாடும் உயிர்கள்மேல்
வாஞ்சையைப்பொழியும் அன்னையைப் பணிவோம்.
ஒன்பது நாளும் கம்பீரமாய் கொலு வீற்றிருக்குமவள்
அழகை தீந்தமிழில் பாடி, அன்னையைப் பணிவோம்!
படத்துக்கு நன்றி
http://www.lotussculpture.com/8bc11.html