ரௌத்திரம் பழகு
அதிகாலையில் அடிக்கும் அலாரம் மீது ஒரு கோபம்.
அடிக்காதிருந்து விட்ட அலாரம் மீது அதை விட கோபம்.
பொறுக்க முடியாது வாயை சுட்டு விடும் உணவென்றால் ஒரு கோபம்.
சூடு இல்லாத உணவென்றால் அதை விட கோபம்.
வார்த்தைகளை வைப்புநிதியில் சேமித்து,உடைக்க தயங்குபவர்கள் மீதொரு கோபம்.
ஓயாது ,பெருமழையென கொட்டி தீர்ப்பவர்கள் மீதும் கோபம்.
பார்த்து,சிரித்து,வழியும் எதிர்ப் பால் மீதொரு கோபம்.
பார்க்காமல்,சிரிக்காமல்,வழியாமல் சென்று விட்டால் அதிலும் கோபம்.
கோபமென்று அறிந்தும் சமாதனப்படுத்த முயலாதவர்கள் மீதொரு கோபம்.
ஒற்றை புன்னகையால் ,என் கோபத்தை குறை ஆயுளில் கொன்று விட்டதில் கூட ஒரு சிறு கோபம்.
அழையா விருந்தாளியாய் என்னோடு வந்து ,என் நெருங்கிய சிநேகம் என
சுயஅறிமுகம் செய்து கொள்ளும் இந்த கோபத்தின் மீதே ஒரு கோபம்.
படத்துக்கு நன்றி
http://www.mindful.org/in-love-and-relationships/working-with-emotions/the-hidden-treasure-of-anger
hahaaha Kothai unakku kobam aahadhadee nu paattu paadiduven pola irukke..:)
ஒற்றை புன்னகையால் ,என் கோபத்தை குறை ஆயுளில் கொன்று விட்டதில் கூட ஒரு சிறு கோபம்.
கோதை! உனக்கு கோவம் ஆகாதடி
Super!
கோதைக்கு கோபம் ஆகாது. அவள் பொருமையின் சிகரம். கண்ணனுக்காக எவ்வளவு காத்திருந்தாள். அவளுக்கு கோபமா? இருக்காது.
வணக்கம் கோதை.
மிகவும் அழகாக ரௌத்திரம் பழகி இருக்கிறீர்கள்.
பலமுறை படித்து ரசித்தேன். பாராட்டுக்கள்! உங்கள் வலைத்தளத்தையும் போய் படிக்கிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி
பழைய பதிவுகளை தேடிபடித்ததற்குமிக்கநன்றி,மேடம்.வலைத்தளம்எல்லாம்இல்லை.அங்கேகுறிப்பிடப்பட்டிருப்பது வல்லமையில்ஆசிரியர்குழுபோட்டிருக்கும் ப டத்திற்கு உரியது. 🙂
கோபத்தை தாபத்துடன் எழுதிய கோதையின் மீது கோபம்
அந்த கோபத்தை ஆதங்கத்துடன் படித்த என்மீதும் கோபம்