விசாலம்

வல்லமை‘ என்ற பெரிய கிரிக்கெட் மைதானம்  அதில் பங்கு பெருபவர்கள் பெரிய ஜாம்பவான்கள் தான்   அதற்கு  கேப்டன் திருமதி பவள சங்கரி   மிகத்  திறமையுடன்  டீம் மை கொண்டுச் செல்லும் கேப்டன் .கூடவே  உபதலைவர்கள் போஸ்டில் திருமதி காயத்ரி, திரு இளங்கோ, திருமதி சாந்தி. இந்த வல்லமை  எழுத்து மைதானத்தை முதலில் நடத்திச்சென்றவர்    திரு அண்ணாகண்ணன்  .அவர் மிகவும் திறமை வாய்ந்த கேப்டன் . பல படைப்புகளைக் கொடுத்து எழுத்துலகில் ரன்களைக்  குவித்திருக்கிறார்.  பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் முதலில் சிபி .காம் sifi  .com  ல்  இருந்த போது என்னையும் எழுத்துலகத்தில்  சேர்த்துக்கொண்டார் . அப்போது ஆரம்பித்தது  தான்

“நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்   “என்று  திரு கண்ணதாசன் அவர்களின் பாடலைப்போல்  நானும் அவர் போகுமிடமெல்லாம்  தொடர்ந்தேன்  . சி பி .காமுக்குப்பிறகு சென்னை ஆன் லைன் னில்  விடாமல் எழுதி வந்தேன்  .  அந்த மைதானத்திலும்  செஞ்சரி எடுத்தேன்’  அங்கு கட்டுரைகளுடன் எனக்கு ” வீடும் வாஸ்துவும் ” என்பதைத்தொடராக எழுத வாய்ப்பும் வந்தது  .பின்  அவர் “வல்லமையை ஆரம்பித்தார்  .  நானும்  இங்கு தொடர்ந்தேன் இந்த வல்லமை என்ற மைதானம் ஆரம்பித்திலிருந்தே  தொடர்ந்து  பல  மேதைகள்  ,சேர்ந்து  திறமையாக விளையாட   நானும்  ..இவர்களுடன் சேர்ந்து  பல கற்றும் வருகிறேன் என் பங்கும் இதில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது  இந்த மைதானத்தில் இந்தக்கட்டுரை  என்னுடைய நூறாவது ரன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சிதான்

இந்த நூறு என்ற நம்பருக்கு மிகவும் சக்தி உண்டு  . கிரிக்கெட் விளையாடும் போது 95 ரன்  தாண்டியவுடனேயே எல்லோருக்கும் ஒருபுது உற்சாகம் வந்துவிடும் பேட்ஸ் மேனுக்கும்தான்  ….பின்  அவன் மிகவும் கவனமாக ஆடிநூறைத் தொட்டவுடன்   மக்களிடையே கரகோஷம்  எழும் .அவனும் தன் மட்டையைச்சுழற்றி நன்றி தெரிவிப்பான் இதுவே நூறைத் தாண்ட  எல்லாம் நார்மலுக்கு வந்துவிடும்   இனி  அடுத்த  ஐம்பதும்   பின் நூறும் தொடும்போதுதான்   அந்த உற்சாகம் திரும்பும் .இதுவே  சினிமாவுக்கும் சொல்லலாம்  நூறாவது நாள் சினிமா ஓட  அது பெரிய விளம்பரம்  ஆகிவிடும்   நாடகமோ வேறு நடனமோ எல்லாமே நூறு நாட்கள்  தொட அதற்கு தனி மவுசு வந்துவிடுகிறது  ,நியூமரலாஜியில் 100 என்றால்  மிகவும் ஒழுங்குமுறை  எனலாம்  ஆங்கிலத்தில்  perfection . .100 ல்   முதலில் இருக்கும்  1  என்பது சூரியனைக்குறிக்கும்   சூரியன்  எப்போதுமே தன் வேலையை  மிகவும்  சரியாக அப்பழுக்கில்லாமல் செய்து வருவான்  . நம்பர் ஒன்று என்றாலே தனி பராக்கிரமம் , .சக்தி , தன்னம்பிக்கை,  எதையும் சாதிக்கும் திறமை , தலைமை வகித்தல்  . தனித்தனமை  ,ஒருவருக்கும் கிழ்ப்படியாத குணம்  . தைரியம்  ,மனோபலம்  என்று பல குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்  . இத்துடன்  இரண்டு சைபர்  சேர  நூறாகிறது .

சைபர் என்றாலே சூன்யம்  …. சில தியானத்தில்  சூன்ய மெடிடேஷன்  என்று ஒன்று உண்டு  .அதில் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி மனதை ஒரு சூன்யமாக  ஆக்கி தியானம் செய்யவேண்டும் .இது மிகவும் கஷ்டமான ஒன்று  ஒரு 15 நிமிடங்கள் செய்வதற்குள் பாம்பு நுழைவதுப்போல்  ஒரு எண்ணம் வந்து நுழைந்து கொள்ளும் . இந்த சூன்ய மெடிடேஷனின் கருத்து   உபனிஷத்தில்  வருகின்ற

“ஓம் பூர்ணமித  பூர்ணமிதம்  பூர்ணாத்  பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய  பூர்ணமாதாய  பூர்ணமேவாவசிஷ்யதே  ” .…………….என்பதுடன்  ஒத்துப்போகிறதோ என்று எனக்குத்தோன்றுகிறது
.
நாம் தியானிக்கும் போது  நாம் ஆக்ஞா சக்கரத்தில் கவனம் செலுத்துகிறோம் இந்த இடத்தை அவிமுகிதம் என்று சொல்வார்கள். இதனின் மூல இயந்திர வடிவம்  சைபரைப்போன்ற வட்டமே .   மூலதெய்வம் சதாசிவம் ,  தேவி மனோன்மனி இதைப்பார்க்கும் போது  100 என்ற எண்ணிற்கு நிறைய சக்தி இருக்கிறது எனத்தோன்றுகிறது

நூறு என்ற எண் மிகவும் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதால் முக்கியமான போலீஸ் அழைக்கும் நம்பராக அது உள்ளது . பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த நூறு புகழைச் சேர்க்கிறது நூற்றுக்கு நூறு கணக்கில்  . என்றால்  அரசின் பரிசும் கிடைக்கிறதுபணத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் நூறு பைசஈ ஒரு ரூபாய் என்றும்   .நூறு பத்துரூபாய்  ஆயிரம் என்றும் நூறை  ஆரம்பமாக வைத்தே    ஒரு பூஜ்யம் சேர்த்தபடி  ஏற்றிக்கொண்டே போகிறோம்  . உடம்பில்  வெப்பமும் நூறு வரை ஏற்றுக்கொள்கிறது .  அது தாண்டிவிட்டால் சுரம் என்று படுத்துவிடுகிறோம்  டெசிமல்  கணக்கிலும் நூறு தான் முக்கிய பங்கு வகிக்கிறது

கோர்ட்டிலும்  “நான் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை   ‘என்று ஆரம்பிப்பதையும் பார்க்கிறோம் .பண்டிகை அல்லது திருவிழாநாட்களில் நாம் பெரியவர்களை  வணங்க  அவர்களும் நூறாண்டு  நோய் நொடியில்லாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துவார்கள்

நூறாண்டு வாழ்ந்தவருக்கு கனகாபிஷேகம் செய்வதையும் பார்க்கிறோம் இது போல் நூறுக்கு இருக்கும் சிறப்பை அடுக்கிக்கொண்டே போகலாம்

இப்போது என் கதைக்கு நான் வருகிறேன் ……. வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து   அதற்குத்தகுந்த பாராட்டும் பெற்று    இன்று நூறாவதைத் தொட்டிருக்கிறேன்  .கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடித்தவருக்கு எப்படி கைத்தட்டல்கள் விழுமோ அது போல பெரியவர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்  சிலர் வயதில் என்னைவிட சிறியவர்கள் ஆனலும் எழுத்துலகில் அவர்கள் பெரிய ஜாம்பவான்களாக இருப்பதால் அவர்களும் என்னை வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் . ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து வரும் போது இது என்ன பெரிய சாதனையா என்று என் மனம் என்னைக்கேட்டாலும்  வாழ்த்துகள் என்பதில் இருக்கும் பாசிடிவ் அலைகள் என் கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையினால் இதை எழுதினேன்

நான்  இதுவரை எழுதி   வரும் குழுமங்கள்    ..திரு  ஆகிரா நடத்தும் மழலைகள்  {,குழந்தைகளுக்கு எழுதுவதே ஒரு தனி ஆனந்தம் தான்}   இல்லம் பிரவாகம்,  முத்தமிழ்   பண்புடன்  நிலாச்சாரல்  தமிழமுதம் அன்புடன் .ரத்னமாலை  ,தமிழ்வாசல்

இதுவரை எழுதிய படைப்புகள் கூடிய சீக்கரம்  ஆயிரம் தொட்டுவிடும்    ஆயிரம் எப்படியாவது  முடிக்க வேண்டும் என்ற ஆசை  தான்    .  அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும்

 என் கட்டுரைகள் வந்த பத்திரிக்கைகள்  , அவள்விகடன் , ஆனந்தவிகடன் , மங்கையர் மலர்  ,ஞான ஆலயம்  ஓம் சரவணபவ  , ஷண்முக கவசம்  வெற்றிநடை. .

 ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து  உச்சியைத்தொட்டிருக்கிறார்கள் . அவர்கள் முன்னால் நான் சிறு துளிதான் ஆனாலும்  என் கடைசி மூச்சு வரை நான் இந்த மைதானத்தில்  பங்குப்பெற்று என் பங்கை திறம்பட  செயலாற்ற வேண்டும்  என்பதே என் ஆசை . அதற்குத்தகுந்த  மன வலிமையும் உடல் வலிமையும் அந்த பரமேஸ்வரன் தான் அளிக்க வேண்டும்

2002 ல் ஆங்கிலம் எழுதி வந்த நான்  2006 ல் தமிழ்க் குழுமத்தில் முதன்முதலாக கால் வைத்தேன்  ஆறு வருடங்கள் ஓடிவிட்டன

இந்த நேரத்தில் என்னை ஊக்கிவித்த  பலர் என் கண் முன் வருகிறார்கள் . முதன் முதலில் என்னைக்கணினியி ன்  முன்னால் தமிழில் எழுதவைத்து  ஆதரித்து என்னை மேலும் மேலும்நம்பிக்கையுடன்  எழுத வைத்த  ” நம்பிக்கை” என்ற குழு நடத்தி வந்த திரு பாசிடிவ் ராமாவுக்கு என் மனமார்ந்த நன்றி .

முத்தமிழ்  நடத்தி வந்த திரு மஞ்சூர்ராஜா     திருமதி விஜி  ,எனக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்திய குருஜி திரு காழியூரார் .  எனக்கு சகோதரராக இருந்து ஆதரித்த  திரு தமிழ்த்தேனீ திரு ஆகிரா திரு இன்னாம்புரான்ஜி  .திருஶ்ரீனிவாசன் ஜி டாக்டர் சங்கர்குமார்ஜி  சிங்கை குமார்ஜி  விக்ஞானி திரு ஜயபாரதன் ஜி  ,திரு அப்துல் ஜப்பார் ஜி   திரு கவியோகி வேதம்ஜி திரு வேந்தன்  திரு திவாகர் ஜி  திரு சிவசிவா திரு சபேராஜி   திரு நடராஜன்   யாவருக்கும் என் நன்றி என் அன்பு மகனாக இருந்து  என்னை ‘சென்னை ஆன் லைன்.’ ” வல்லமை” யில் எழுத வாய்ப்பளித்த  திருஅண்ணா கண்ணனுக்கும் நன்றி  .

இல்லத்தில் இருக்கும் மூத்தவரான  திரு பர்வமணி அவர்களுக்கும் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன் அழகியைக் கண்டுப்பிடித்த  என் மகனான திரு விஷி என்ற விசுவநாதனுக்கும்  என் நன்றி  இசைக்கவிஞர் திரு ரமணன் ஜி யின் மனதைத்தொடும் பாடல்கள் எனக்குக் கவிதை எழுத  ஒரு தூண்டுகோலாக அமைந்தது .அன்பு சகோதரர் திரு ரமணனுக்கு  என் நன்றி .

 திரு பென்னேஸ்வரன் தமிழ் வாசலையும் திறந்து வைத்ததால் அதில்  எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி

முழுவதும் ஆன்மீக மலராக மலர்ந்து நிற்பது  ரத்னமாலா  .அதை நடத்தி வருபவர் என் சகோதரர் டாக்டர் சங்கர்ஜி என் ஆன்மீகம் வளர அதுவும் ஒன்று   மிக்க நன்றி

என் அன்பு தோழிகள் திருமதி  ஷைலஜா  திருமதி கீதா சாம்பசிவம்  திருமதி மீனாமுத்து, அன்பு சகோதரி திருமதி சீதாலட்சுமி . திருமதி ஜயஶ்ரீ சங்கர் ,திருமதி காயத்ரி யாவரையும் பாசத்துடன் நினைவுகொள்கிறேன்  மிக்க நன்றி

திரு சுரேஷ் என்ற என் மகன் பிளாக் போடும் முக்கியத்துவத்தை என்னிடம் கூறியதால்  எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்பட்டது  அதற்காக நான் டாக்டர் சிவசங்கரை நாடியபோது   அவர் எனக்கு மீராம்பிகா என்ற பிளாக்கை ஆரம்பித்துக்கொடுத்தார் அவரும்  என் அன்பு மகன் தான் அவருக்கும் என் நன்றி .அத்துடன் திரு பாலமுரளி மேலே என் பிளாக்கில் படங்கள் போடும் விதத்தைச் சொல்லிக் கொடுத்து எனக்கு உதவினார் நன்றி பாலா

என்னை எழுத்துலகில் மேலும் எழுத தூண்டுகோலாக இருந்து  உற்சாகப்படுத்திய மகள்கள்  திருமதி பவளஸ்ரீ  திருமதி  ஜயந்தி , திருமதி விஜி   திருமதி காந்திமதி  ; நிலச்சாரல் நடத்திய திருமதி நிர்மலா  யாவருக்கும் என் நல்லாசிகளுடன்  நன்றி. திரு ஆசீப் மீரான் .திரு உமாநாத் ,திரு பாலமுரளி ,திரு வேணுகோபால், யாவருக்கும் என் நன்றி

இந்த எல்லா குழுமத்திலும் பல சகோதரர்கள் ,பல மகன்கள் .பல மகள்கள் என்னை ஆசையுடனும் பாசமுடனும் அம்மா என்று அழைத்து  பேசும் போது மனம் நெகிழ்ந்து போகிறது  வாழ்க குழுமங்கள் .

ஒற்றுமையுடன் ஆக்கப் பாதையில்  எல்லா குழுமங்களும் நன்கு சிறப்பாக  நடக்க என் பிரர்ர்தனையுடன் கூடிய   நல்லாசிகள் .

அன்புடன்  விசாலம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “‘சதம் “அடித்தேன்

  1. ஸாய்ராம்.  வணக்கம்ஜி.  தங்கள் அனுபவத்தையே இப்படி ஒரு சுவையுடன் மெருகு கூட்டி எழுதும் பாங்கே மிக அற்புதம்.  தங்களின் படைப்புகள் பல படித்திருக்கிறேன், சென்னை-ஆன்லைனில் உட்பட.    தாங்கள் பல சதங்கள் எடுப்பவர்.   தங்களைப்போல், எனக்கு ஆர்வம் இருந்தும், திரு அண்ணா கண்ணன் அவர்கள் கொடுத்த ஊக்கம், ஆதரவு, வல்லமை ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்களின் ஊக்கமும் ஆதரவும் எழுத்துலகில் காலடி எடுத்து, தத்தித் தத்தி தவழும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளன.    எழுதுவதற்கு நிறையப் படிக்க வேண்டும் என்று பலரும் சொல்ல, இப்பொழுது ஓய்வு காலத்தில், என் எழுபதில் படிக்க ஆரம்ப்பித்திருக்கிறேன்.  தாங்கள் எழுத்துலகில் மேலும் நிறைய எழுதி, பல சதங்கள் அடித்து ஒரு பெரிய ஜாம்பவான் ஆக (இப்பொழுதே ஒரு ஜாம்பவான் தான்)  இறை அருள் பெற்றிட பிரார்த்தனைகள்.  ஜீதே ரஹோ மாஜி.

  2. வாழ்க, வாழ்க, வளர்க உங்கள் எழுத்துப் பணி

  3. அன்பர்களே ஒரு சின்ன திருத்தம் டாக்டர் சங்கர்குமார் ஜி நடத்தும் ” இரத்னமாலை என்ற குழுமத்தின் பெயரை “ரத்னமாலா ‘என்று எழுதிவிட்டேன் தவறுக்கு மன்னிக்கவும்

  4. உங்களுக்கேயான பாணியில் அழகாக 100ம் கட்டுரையை எழுதியிருக்கிங்க…வாழ்த்துக்கள் மேடம்…..

  5. இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன் அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *