திவாகர்

”உள்ளம் என்பது ஆமை – அதில் 

உண்மை என்பது ஊமை,

சொல்லில் வருவது பாதி, 

நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி” 

கவியரசு கண்ணதாசனின் இந்த அருமையான பாடலை யாராவது அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திக் கொ0ண்டிருப்பார்கள் போலும்!


 உள்ளம் அல்லது மனதில் ஊறும் சிந்தனைகளை யாரும் அப்படியே வெளியே சொல்ல முடியாதுதான்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான விசித்திர உருவகங்கள், எத்தனை விதமான சிந்தனைகள், எத்தனை விதமான விருப்பங்கள்.. ஒரு தனி மனிதனின் விருப்பமான விஷயங்கள் பற்றி ஒரு உண்மை அறிய கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு கேட்டால் ஏகப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது தீனி போடும்.. ஏகப்பட்ட சினிமாப் படங்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உருவாகி ( இந்தியாவைப் பொறுத்த வரை மலையாளிகள்தானே உண்மையான திரைப் படைப்புகளை இன்னமும் தருகின்றார்கள்!) மேலும் மேலும் மனிதனை வியக்க வைக்கும்.


தனி மனிதன சிந்தனைப் போக்குக்கு தடையே இல்லைதான்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளாகட்டும் மெய்ஞ்ஞான நீதியாகட்டும் அவனின் தனிப்பட்ட சிந்தனைப்போக்கில்தான் அது உருவாகிறது.. வேதாந்த சித்தாந்தங்களும் கூட அவன் சிந்தனையின் ஒரு கட்டம்தான். விருப்பமும் வெறுப்பும் கூட அவன் தனி மனிதப் போக்குதான். ஒருவனுக்கு ஒன்றைக் கண்டால் காரணமில்லாமலே பிடிக்காது.. ஒருவனுக்கு அந்த குறிப்பிட்ட ஒருவனைக் கண்டாலே பிடிக்காது. இதற்கெல்லாம் காரணம் அவனிடம் நிச்சயமாகக் கிடையாது. மனம் சொல்கிறது.. பிடிக்கவில்லை.. அவனால் அந்த உணர்ச்சியை மாற்றிக்கொள்ள முடியவே முடியாது போலத்தான் தோன்றும். மனமாற்றம் என்பது எளிதில் பெறக்கூடியது அல்லவே அல்ல. மனமாற்றம் என்பது பல சோதனைக் கட்டங்களைத் தாண்டித்தான் ஏற்படும்.. 


இப்படித்தான் மனத்தில் தோன்றும் ஒரு விசித்திரமான விருப்பத்தின் பேரில் ஒரு கதையை எழுதி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் திரு அரவிந்த சச்சிதானந்தம். https://www.vallamai.com/literature/short-stories/28531/ இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெண்கள் அணியும் ஆடையிலிருந்து கைக்குட்டை வரை உள்ள தனிப்பட்ட பிரியத்தை அழகாக விளக்கி இருக்கிறார். இது சாதாரணமாகப் படிக்கும்போது இந்தக் கதாபாத்திரத்தில் சாயல் மாறுபட வாய்ப்புள்ளது. ஆனால் இப்படி மாறுபடாமல் உள்ளத்திலேயே ஊற வைத்துக்கொண்டு மறைமுகமாக தன் உள்ளத்து ஆசைகளைத் திருப்திப்படுத்துவதாக எழுதி இருக்கிறார். மெல்லிய கயிறின் மேல் நடப்பதாக இந்தக் கதாபாத்திரம் காணப்பட்டாலும் கயிறு அறுக்கப்படாமல் பாத்திரத்தின் நடையை நகர்த்தி செல்லும் திரு அரவிந்த் சச்சிதானந்தந்தத்தை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் அறிவிக்கிறோம். இது போன்ற மனோவியல் சம்பந்தப்பட்ட கதைகளை அடிக்கடி எழுதவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்..


திரு அரவிந்த அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.


கடைசி பாரா: 

வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து…

சதம் அடித்த திருமதி விசாலம் அம்மையாருக்கு வாழ்த்துகள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.