துளிர்!
தமிழ்முகில் பிரகாசம்
கையிலிருக்கும் அட்சயப் பாத்திரத்தின்
பெருமை உணராது – அலட்சியமாய்
ஒடித்தெறிந்து விட
இன்றோ – பிச்சைப் பாத்திரம்
ஏந்தி நிற்கிறோம் !!!
மரங்களை வெட்டி
எறிந்தோம் – தூய்மையான
சுவாசக் காற்றைத் தேடி
யாசகர்களாய் அலைகிறோம் !!!
பாவிகளை இரட்சிக்கும்
தேவ தூதன் என –
நமக்காய் மீண்டும் மண்ணில் –
புத்தம் புது துளிராய் !!!
புது நம்பிக்கையுடன் …………
புது உற்சாகத்துடன் ……..
தன்னலமில்லா மனத்துடன்
ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!
மரங்கள் நம்முடைய குழைந்தைகள் . அவைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. வெட்டுவதல்ல. இந்த கவிதையின் கடைசி வரிகள் ஒரு விதை முளைவிடுவதை ஒரு உயிரின் பிறப்பை காட்டும் விதமாக…..
////நமக்காய் மீண்டும் மண்ணில் –
புத்தம் புது துளிராய் !!!
புது நம்பிக்கையுடன் …………
புது உற்சாகத்துடன் ……..
தன்னலமில்லா மனத்துடன்
ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!
என்று முடியும் வரிகள் சுபெர்ப்,சுபெர்ப் சுபெர்ப்.பாராட்டுகள்,
தங்களது வாழ்த்துக்கட்கும் பாராட்டுதல்கட்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தனுசு அவர்களே !!!
கதையைப் போல கவிதையும் நன்றாகவே வருகிறது உங்களுக்கு
மிக்க நன்றி சகோதரி….