வேற்றுமையில் ஒற்றுமை
சுலோச்சனா
மனிதன் பிறப்பால் அங்க அமைப்புகளினால் அவைகளின் செயல் பாடுகளினால் ஒன்றுபட்டவனாக இருக்கின்றான்.ஆனால் சிந்தனைகளில் அதன் விளைவான செயல்களில் பழக்க வழக்கங்களில் வேறு பட்டவனாக இருக்கின்றான்.
நல்லவன்,தீயவன் செல்வந்தன் ஏழை என இரு பிரிவாகப் பொதுவாகப் பிரித்தாலும் மதம் முதல் மனப்போக்கு வரை உட்பிரிவுகள் கொள்கைப் பிரிவுகளெனவும் பல உட்பிரிவுகள்.ஆனால் அனைவருக்கும் பொதுவானவை பின்பற்ற வேண்டியவை என சில குண நலன்கள் சான்றோர்களால் குறிப்பிடபட்டுள்ளன.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.(குறள் : 341)
மற்றவர் உடமைக்கு ஆசை படாதிருத்தல் ஆசைப்படுவதோடு நில்லாமல் வலிய அதைஅடைய முயலுதல் போன்றவைகளால் ச்மூக நலனுக்கு ஊறு நேர்கின்றது.இது வன்றி இறை நம்பிக்கை உடையவர்கள் உள்ளனர்.அது இல்லாமல் அப்படி ஒரு சக்தி உண்டு என்பதில் மறுப்பு உணர்வு உள்ளவர்களும் உள்ளனர். மனித இனத்தில் இதுவும் ஒரு பிரிவே எனக் கூறலாம்.ஆத்திகம் பேசுபவர்கள் நாத்திகம் பேசுபவர்கள் இரு பிரிவாக இருப்பினும் , ந்ற்செயல்கள் நல்லொழுக்கம் ச்மூக நலனுக்காக் பாடுபடுதல் என செயல்படும்பொழுது “மனித நேயம் “ எனும் மாண்பில் ஒன்றாகவே மதிக்கப்படுகின்றார்.
இதுவும்-அதுவும் கலப்படமாக “பகுத்தறிவுவாதிகள்” எனும் பண்பாளர்களும் மூட பழக்கவழக்கங்களுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் அவறறை முறியடிக்க முயற்சிக்கின்றனர்.
“பகுத்தறிவு இல்லாத பக்தி மூடத்தனம்
பக்தி இல்லாத பகுத்தறிவு அரக்கத்தனம்”
என்பது திரு.வி.க அவர்களின் பொன் போன்ற திருவாக்கு.ஆனால் எத்தனையோ வேற்றுமைகளில் ஊடே ஓர் ஒற்றுமை ஊடாக ஊடுருவி நிற்கின்றது.ஒரே மருந்து அருமருந்து
சுய நலம் இன்மை – அள்வோடு ஆசைகொளல்
பொதுவாக எதன் மீதும் அதீத பற்றின்றி வாழ்தல் அடுத்து உலகத்தையே ஒரு குடை கீழ் கொண்டுவரும் ஓர் மாபெரும் சக்தி அதை வேதம் முதலிய நூல்கள் பிரம்மம் என்கின்றனர்.பலர் உண்மை என்கின்றனர். சிலர் சத்யம் என்கின்றனர்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (குறள் : 350)
என்பது ஐயன் வாக்கு.
எப்படி அழைக்கப்பட்டாலும் ஆத்திகன் நாத்திகன் பகுத்தறிவு வாதி அனைவரும் வணங்கி நின்று ஒன்று பட வேண்டிய ஒரே சக்தி “சத்தியம் என்ற உண்மையே ஆகும்.”
தட்டச்சு உதவி : உமா சண்முகம்