2 thoughts on “ஆட்டிசம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (1)”
குழந்தைகளிடம் ஆட்டிசம் என்ற குறைபாட்டைக் கண்டு கொள்ள உதவியாக இந்தக் குறிப்புக்களைப் படித்தீர்களா? நாம் செய்யக் கூடிய பெரிய உதவி, இத்தகைய அறிகுறிகளுடன் குழந்தைகள் நம் கண்ணில் பட்டால், அவர்கள் பெற்றோர்களிடம் இத்தகைய குறைபாடுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் எளிதில் சரிப்படுத்தப்படக் கூடியதே என்ற தகவலை சொல்லுங்கள். அருகாமையிலேயே உதவிக் குழுக்கள் உதவும் கரங்கள் என்று நிறைய பக்கபலம் இருப்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
////”இத்தகைய அறிகுறிகளுடன் குழந்தைகள் நம் கண்ணில் பட்டால், அவர்கள் பெற்றோர்களிடம் இத்தகைய குறைபாடுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் எளிதில் சரிப்படுத்தப்படக் கூடியதே”////
krishna moorthy S. மன்னிக்கவும், இக்கருத்து மிக மிகத் தவறு.
அனைத்து ஆட்டிசம் குழந்தைகளையும் ஒரேவகையில் வகைப்படுத்த முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை (மற்ற பிற சாதாரண மக்களைப் போலவே). ஒரு சிலரைத்தான் ஓரளவு சராசரி சமூக வாழ்க்கைகுக்குத் தயார் செய்யலாம், அதுவும் அளவு கடந்த முயற்சி மற்றும் பயிற்சியினால். மற்றும் பலரை தனது சுயசெயல்களை, அதாவது தினசரி உடல் சுகாதார பராமரிப்புகள், தானே உணவு உண்ண, உடை உடுத்த போன்றவற்றை பயிற்சி கொடுத்து அவர்கள் அடுத்தவர்களுக்கு பாரமாக இருக்காமல் செய்வதுதான் நல்ல வழி.
பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு சரியில்லை என்று எந்த ஒரு பெற்றோரும் ஏதேனும் ஒரு முறையாவது விமர்சனத்திற்கு உள்ளாவார்கள். மேற் கூறப்பட்ட தவறானக் கருத்தைப் படிப்பவர்கள் பெற்றோர்களை மேலும் தவறாக பொறுப்பற்ற பெற்றோர்கள் எனக் கருதவே வாய்ப்பு தரும். ஏற்கனவே பல முற்சிகளையும் செய்து கைவிரித்துவிட்ட நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களது நிலையை புரிந்து அனுசரனையாக இருப்பதுதான் சுற்றி இருப்பவர் செய்யும் உதவி.
ஒரு ஆட்டிசம் குழந்தை எவ்வாறு நடந்து கொள்ளும், அதன் தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பவளாவின் “வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(16)” [https://www.vallamai.com/literature/serial/4879/] படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அவர் கண் முன் ஒரு குடும்பம் அலைக்கழிக்கப் பட்டிருப்பர்களோ, அதை பார்த்து உணர்ந்து எழுதினாரோ என்று தோன்றியது அதைப் படித்த பொழுது. அவசரகதியில் இயங்கும் உலகில் அந்த ஆட்டோ ஓட்டுனர் போலவும், ஸ்கூட்டி பெண் போலவும் இவர்களுக்கு உதவ யாரும் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
உலகில் மற்ற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பெறும் பரிதாபப் பார்வை ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கிடைக்காது. வளர்ப்பு சரியில்லை, மனநிலை சரியில்லாத பைத்தியம் போன்ற stigma ஆட்டிசம் குழந்தைகளுடன் ஒட்டிக்கொள்ளும்.
ஆட்டிசத்தில் பாதிக்கப் பட்டும் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்களும் உண்டு(ஆனால் இவர்களே பெரும்பாலும் உலகுக்கு உதாரணமாகக் காட்டப் படுவார்கள்); Rainman படக் கதாநாயகன் போலஅவர்கள் outlier கள். பேசும் சக்தியை இழந்து இறுதி வரை குழந்தை போல யாருடைய பராமரிப்பிலாவது வாழ வேண்டியவர்களும் உண்டு.
தீவிர சிகிச்சையால் சரி செய்துவிடலாம் என்பது அப்பெற்றோர்களுக்குத் தரும் பொய் நம்பிக்கை. இதை எந்த நரம்பியல் வல்லுனர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். முயற்சி ஓரளவுக்கு முன்னேற்றத்தைத் தரும், அதுதான் உண்மை. முற்றிலும் குணப்படுத்தப் பட்டவர் என யாரும் இல்லை. “ஹை ஃபன்க்க்ஷனிங்” ஆட்டிசம் பாதிப்பாளர்கள் “லோ ஃபன்க்க்ஷனிங்” ஆட்டிசம் பாதிப்பாளர்களை விட அதிர்ஷ்டம் செய்தவர்கள், அவ்வளவே.
கண் பார்வை குறைவு, காது கேளாமை, பேசமுடியாமை, கைகால்கள் இயக்கமில்லாமை போல இதுவும் ஒரு பிறவிக் குறை. இதுபோன்ற பதிவுகள் ஆட்டிசம் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களுக்குத் தரும். பதிவுக்கு நன்றி.