மலேசியாவில் இந்திய கல்விக் காட்சி

0

Edmoi2011

மலேசியாவில் Edmoi 2011 எனப்படும் இந்திய கல்விக் காட்சி (Education Fair) 2011 மே 7 சனிக்கிழமையன்று இனிதே நடைபெற்றது.

பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவேரில் காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த Edmoi கல்விக் காட்சி, மலேசியாவில் உள்ள மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வியைத் தேர்ந்தெடுத்து, மேற்கொண்டு படிக்க உதவி புரிகிறது. இக்கல்விக் கண்காட்சியைப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் டத்தோ எஸ்.கே. தேவமணி, திருச்சி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.தேவதாஸ் மனோகரன் மற்றும் இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இக்காட்சியில் அண்ணா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம்., ராகாஸ், மும்பை, பூனேயிலுள்ள கல்லூரிகள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல கல்லூரிகள் கலந்துகொண்டன. மலேசியாவில் உள்ள மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வியை இந்தியாவில் தொடர இக்கல்விக் காட்சி நடைபெற்று வருகிறது.

மாலை 4 மணிக்கு மனித வளத் துறை அமைச்சர் டத்டோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் காட்சியைப் பார்வையிட்டு அனைத்துக் கல்வியாளர்களிடமும் கலந்துரையாடினார். அப்போது மலேசியாவில் இருந்து இந்தியாவில் பயில வரும் மாணவர்களின் கல்வித் தகுதி, குறைகளைப் பற்றி ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமசந்திரன் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியை Edu World Link Consultancy இயக்குநர் தீனதயாளன் ஏற்பாடு செய்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.