மாரியாய்ப் பொழியும் தாய்மை!

2

தி. சுபாஷிணி

mother

தடுக்கி விழும்போது தாங்கும் – நீ
தாங்குவாய் என எதிர்பார்க்காது
தன்னுள் இருக்கும்போதும்
தன்னின்று பூமியில் விழும்போதும்.

உன் முகம் பார்த்து
ஊட்டிய சோற்றுக்கு
உறக்கமில்லா இரவுக்கு
உண்டா கணக்கு?

தன்னையே மறந்திடும் – நீ
தரும் ஒரு முத்தத்தில்.

தன் பூ மலரும்போது
தாள இயலா சந்தோஷம் – உடனே
தாங்க இயலாத் துயரம்
தன்னைப் போல் துன்பம் தாங்குமா என.

உன் மீசை முளைக்க முளைக்க,
ஊர்கொள்ளா மகிழ்ச்சி
உவந்தோம் ஒர் ஆண் மகன் என்று!
உடனே தவிப்பு
தன்னை விட்டு நகரும் உணர்வு!

அன்பைப் பத்திரப்படுத்தி
அன்பை மட்டுமே உன்னிடம்
மாரியாய்ப் பொழியும் தாய்மை!

மதித்திடுவோம்!
மகிழ்ந்திடுவோம்! அவள் ஒளியில்
ஒளிர்வோம்! அவளை
ஒளிரச் செய்வோம்!

==============================================

படத்திற்கு நன்றி: http://www.iwillteachyoutoberich.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *