சத்தியமணி

 

குழலூதக் கலைகற்று கொடுப்பான் – கோதை
குழலாடும் பின்னேகி ஊதிக் கெடுப்பான்
பழகாத வித்தையோ காதல் – மாயன்
அழகாக விளையாடி போதைக் குடிப்பான்
தேமொழி தமிழ்பாடக் கேட்பான் – பாவைத்
தேனாழி அலையாட நீச்சல் அடிப்பான்
தூரிகை வண்ணம் எடுப்பான் – அதைப்
பேரிகை முழங்க‌ ஓவியம் களிப்பான்
வெல்லமை யீட்டிடும் வித்தன் – எடுத்து
சொல்லமைத் தாடிடும் சித்தன்
வல்லமைத் தருகின்ற வரதன் – விசயன்
வில்லமைக் கும் கண்ணன் வாழி!வாழி!

(குறிப்பு- தேமொழியின் வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 வர்ணிக்கும் கண்ணனின் பாட்டு)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கண்ணன் வாழி!வாழி!

  1. கவிதை வரிகள் மனத்தைக் கவருகின்றன திரு. சத்தியமணி அவர்களே.
    இது போன்று கவிதைகளைப் பெறுவதற்காகவே படம் எழுதுவதைத் தொடரும் ஆசையும் வருகிறது. மிக்க நன்றி.

    அன்புடன்

    ….. தேமொழி

  2. படம் வரைவதும் அதற்கு தமிழெடுத்து இசைப்பாடல் புனைவதும் 
    திறமிகு கலைகளின்  வழக்கம் கலைஞரின் பழக்கம்
    படம் வரைபடமானாலும் (ஒருவரின் துடிப்பு) சரி திரைப்ப‌டமானாலும் (பலரின் உழைப்பு)  சரி காண்போருக்கும் கேட்போருக்கும் களிப்பள்ளி தரவேண்டும். இன்னும் திறமையோடு வளர வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *