கனவுதிர்காலம்

 

-வருணன்

 

ஆழ்நித்திரையிலிருந்த

கனவுகளனைத்தையும் துயிலெழுப்பி

வரிசைக்கிரமமாய் அடுக்கியாயிற்று

குறுங்கனவுகள் முன்வரிசையில்

நீள்கனவுகள் பின்வரிசையில்

இடைச் செருகலாய் பகற் கனாக்கள் சில

நாளுக்கு ஒன்றென

உதிரும் கனவு மரத்தின் இலைகள்

அதிவிரைவில் காணவிருக்கும்

இலைகளற்ற கிளைகள் குறித்த

வெறுங்கனவோடு சேர்ந்து

நகர்கிறது இந்த இரவும்.

 

படத்துக்கு நன்றி: http://mermaidartist.wordpress.com/page/9/

2 thoughts on “கனவுதிர்காலம்

  1. வாழ்க்கையும் இதே போன்று தான் வருணன். முளைய்த்து வளர்ந்து, உதிரும் ஒரு மரம் போன்றதே. நல்ல கவிதை.

  2. நன்றி தோழரே. ஆம். நீங்கள் சொல்வது உண்மயே. யதார்த்தத்தின் மீது கற்பனையும் எதிர்பார்ப்பும் பூசுவது தானே கனவு. ஒரு வகையில் கனவு வாழ்வின் நீட்சி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க