இயற்கையே தெய்வம்!..
விசாலம்
இயற்கையே தெய்வம்!….
இதையே பாரதியாரும் “இயற்கையென்றுனை உரைப்பார், சிலர் இணங்கும் ஐம்பூதங்களென்றிசைப்பார்” என்று இயற்கையை சிவசக்திக்கு ஒப்பிடுகிறார் அத்துடன் பஞ்ச பூதங்கள் என்றும் சொல்கிறார் இதிலே தான் அப்பு வாயு நீர் நிலம் நெருப்பு என்பவை பின்னப்பட்டிருக்கின்றன நாம் இயற்கைக்குக்கேடு செய்ய அது நமக்கே கேடாக முடிகிறது மரங்களை அழித்து வீடுகள் கட்டுகிறோம் காடுகளை அழிக்கிறோம் இதனால் நமக்குத்தேவையான பிராணவாயு குறைந்து கரிமலவாயு அதிகமாகிறது இதனால் மழை குறைவாகிறது ,இதன் பலன் விளைச்சலும் குறைகிறது ,தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது ஓசோன் என்னும் திரை குறைந்து கடும் வெப்பம் உண்டாகுகிறது. நாம் இயற்கையை வணங்கி பிரார்த்தித்து காக்க வேண்டும் முன் காலத்தில் அக்னிக்குத்தனி பூஜை நீருக்குத்தனி பூஜை அரசமரம் வேப்பமரம் போன்ற்வைகளுக்கும் பூஜை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்
,நான் ஒரு எகிப்து நாட்டுக்கதையைப்படித்தேன் அதில் சூரியனின் முக்கியத்துவம் பற்றிக்கூறப்பட்டிருக்கிறது
‘எலோடஸ் என்பவர் இயறகையை மிகவும் ரசிப்பவர் .இயற்கைமேல் அதிக பற்றும் பக்தியும் வைத்திருந்தார் ,ஒவ்வொரு செட்யுடன் பேசுவார் நீரை வீணாக்க மாட்டார்
காலையில் வெகு சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு முற்றத்தில் வந்து நிற்பார் அழகான செந்நிறமான சூரியனைக்கண்டு ரசிப்பார் பின் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்து விடுவார் தெருவில் போவோர் எல்லோரும் இவரைக்கண்டு சிரித்தனர் கேலி செய்தனர் ஆனாலும் இவர் இதைப்பராட்டவில்லை
“என்ன முட்டாள் மாதிரி சூரியவெளிசத்தை வணங்குகிறாயே ” என்று சிலர் கேட்க
அதற்கு இவர் “உங்களுக்கு இயற்கையின் அருமை பெருமை தெரிந்தால்தானே உங்கள் அறியாமையால் இப்படி பேசுகிறீர்கள் ” என்பார்
தினமும் அந்தப்பக்கம் ஒரு கடலை வியாபாரி வருவாள் எலோடஸைப்பார்த்து கேலி செய்வாள்
ஆனல் எலிடோஸ் மிகப்பொறுமையாக கேட்டபடி இருப்பார் அன்றைய தினமும்
கடலைவியாபாரி வந்தாள் , “எல்லோரும் இந்தப்பைத்தியக்காரரைப்பாருங்கள் தினமும் சூரியனைக் கும்பிடுகிறார் சூரியன் அதன் கடமையைச்செய்கிறது
வெளிச்சம் தருகிறது அது என்ன தெய்வமா? இந்தக்கும்பிடு கும்பிடறாரே கஷ்டம் கஷ்டம் என அலுத்தபடி சொன்னாள்
இது நாள் வரை பொறுமையாக இருந்த எலிடோஸ் ” கடலை வியாபாரியம்மா என்னை
நீங்கள் தினமும் கிண்டல் செய்கிறீர்கள்! சூரியன் தான் முதன்மையான இயறகைக்கடவுள் இதை வழிபட நம் வாழ்வும் மேன்மையடையும் “
“இது என்ன பைத்தியக்காரத்தனம் தினமும் சூரியனைக்கும்பிடு இயற்கை தெய்வம் என்றெல்லாம் பிதற்றுகிறீரே!”
“சரி சூரியனின் அருமைத்தெரிய நான் ஒன்று சொல்கிறேன் கேட்பீர்களா? தைரியம் உண்டா ?” “என்ன சொல்லுங்கள் கேட்கிறேன்”
“ஒருநாள் முழுவதும் ஒரு இருட்டு அறையில் இருந்து கழிக்க வேண்டும்
உங்களால் அப்படி இருக்க முடியுமா?
“இதென்ன பிரமாதம் இருக்கலாமே என்னால் முடியும் ” என்று ஆணவத்துடன் பதிலளித்தாள்.
எலிடோசும் தன் வீட்டின் பின் புறம் இருக்கும் ஒரு இருட்டறையில் அவளைத்
தங்க வைத்தார்,எல்லா கதவுகளும் மூடிவிட்டார்
“உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளேயே அவளுக்கு மூச்சு அடைத்தது
காற்று வரவில்லை வெளிச்சம் வரவில்லை மனதுக்குள் ஒரு பயம் வந்தது
மறுநாள் கதவைத்திறந்ததும் வெளியே ஓடோடி வந்தாள் கடலைக்காரி
எலிடோசின் கையைபிடித்தாள்
“என்னை மன்னித்துவிடுங்கள் ஒரு நாள் முழுவதும் இருட்டில் இருப்பது எத்தனைக்கடினம் என்று தெரிந்துக்கொண்டேன் சூரிய வெளிச்சம் உடலில் படும்
போது தான் புத்துண்ர்ச்சிப்பெற்றேன் சூரிய ஒளிக்கு ஒரு அபூர்வ
சக்தி இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன் இனி நான் கேலி செய்ய மாட்டேன்
நானும் அந்தச்சுரியனை வணங்குவேன் “
எலிடோஸ் சிரித்தார் ” நாம் செயற்கைப்பொருட்களைக்கண்டுபிடிக்கிறோம்
ஆனாலும் அதில் எதாவது பிரச்சனை ஏற்படுகிறது ஆனால் அந்தத்தெய்வம்
போன்ற இயற்கைகளால் நம்க்கு நன்மையே ..அவைகள் இல்லாமல் நாம் வாழமுடியாது,,காற்று நீர் நெருப்பு சூரிய ஒளி இவைகள் எல்லாம் இல்லாமல் நம்மால் உயிர் வாழமுடியுமா ?’
கடலைவியாபாரி இயறகையின் பெருமையை உணர்ந்தாள்.
சமயம் என்னும் சிறையில் அடைபட்டு குறியீடுகள் என்னும் உருவ வழிபாடுகள் தோன்றுவதற்கு முன்பு, ஆதிகால மனிதனும் இயற்கையையே இறைவனாக வைத்து வழிபட்டான். நாமும் இயற்கையின் ஆற்றலையும் பெருமையையும் உணர்ந்து அதனைக் கடவுளாக அடிபணிந்து வணங்குவோம். இயற்கையைப் பற்றிய தங்களின் கட்டுரைக்கு நன்றி அம்மா,