திருமுருகன் துதிமாலை (4)

நிலைக்கின்ற பொருளோடு கொடுக்கின்ற வள்ளல்

குணம் வேண்டும் கொள்கை வேண்டும்

அலைகின்ற   மாயத்தின் சுழல்மாட்டும் முன்னாலே

வந்து நீ காக்க வேண்டும்

சிலையென்று ஆகாமல் தினந்தோறுமே வந்து

தரிசனம் காட்ட வேண்டும்

மலைவந்து காண்கின்ற காட்சியும் தானிந்த

நிலம்நின்று காட்ட வேண்டும்

மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

விளையாடும் வேலகுகனே

துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

முகங்காட்டும் சக்திமகனே   (4)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க