இலக்கியம்கவிதைகள்

வந்து விட்டது வசந்த காலம் !!!

 

பி. தமிழ்முகில் நீலமேகம்

 

இலையுதிர்த்த  மரங்களெல்லாம்

மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருக்க

மகரந்தங்களைத் தேடி மலர்களை

சில் வண்டுகள் ரீங்கரிக்க

குறுகிய காலத்துள்  –

மரக் கிளைகளில்

இலைகள் துளிர்த்திருக்க

உதிர்ந்த மலர்கள்

நிலமெங்கும் மலர் மஞ்சம்

அமைத்திருக்க –

எங்கெங்கு  காணினும்

மஞ்சள்  மகரந்தங்கள்

மங்களம் பரப்பிட

கூடவே ஒவ்வாமையையும்

இலவச  இணைப்பாய்

அள்ளி வழங்கிட

உற்சாகமூட்டும் வண்ணங்கள்

நம்மைச் சூழ்ந்திருக்க

பறவைகள் பரவசமாய்

வானில் இசைபாடி

வலம் வர – உறக்கத்திலிருந்த

அணில்களும் முயல்களும்

உற்சாகமாய் துயிலெழுந்து

துள்ளியோட – வந்து விட்டது

வசந்த காலம் !!! – எங்கெங்கும்

உற்சாகமும் இன்பமும்

சூழ்ந்திருக்கவே !!!!

Print Friendly, PDF & Email
Share

Comments (6)

 1. Avatar

  அணில்களும் முயல்களும் துள்ளி விளையாடும் வசந்தத்தின் வருகை அருமை!

  வாழ்த்துக்கள் திருமதி.தமிழ்முகில் நீலமேகம் அவர்களே!

 2. Avatar

  எங்கெங்கு காணினும்

  மஞ்சள் மகரந்தங்கள்

  மங்களம் பரப்பிட

  கூடவே ஒவ்வாமையையும்

  இலவச இணைப்பாய்

  அள்ளி வழங்கிட////

  எதார்த்தத்தையும் சேர்த்தே வந்த இவை நான் ரசித்த வரிகள்.

 3. Avatar

  @திரு.சச்சிதானந்தம்
  தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் திரு.சச்சிதானந்தம் அவர்களே !!!

 4. Avatar

  வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறும் இனிய இயற்கைக் காட்சிகளை அழகிய வரிகளில் வடித்தெடுத்திருக்கும் திருமதி. தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

 5. Avatar

  @திரு. தனுசு
  தாங்கள் என் கவிதையை இரசித்துப் பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!

 6. Avatar

  @ மேகலா இராமமூர்த்தி
  தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க