-சத்திய மணி

 

ஒன்றாக இருக்கின்ற தாயானவள்

இரண்டாக இணைகின்ற உறவானவள்

மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்

நாலாக நவில்கின்ற மறையானவள்

ஐந்தாக அருள்கின்ற வடிவானவள்

ஆறாக சுவைக்கின்ற ருசியானவள்

ஏழாக ரசிக்கின்ற நிறமானவள்

எட்டாக படைக்கின்ற சித்தானவள்

ஒன்பதாய் உண்டாக்கும் சுமையானவள்

பத்தாகி வெற்றிக்கு பிறப்பானவள்

இரவிலே ஒளிகாட்டும் விளக்கானவள்

எல்லா மிடம்நிறைந்தப் பெண்தானிவள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வசந்த நவராத்திரி நாயகி

  1. நன்றி திருமதி பார்வதி ராமசந்திரன் அவர்களே. பிரதமை(ஒன்று) திதியிலிருந்த தசமி திதி வரை கொண்டாடப் படும் நவராத்திரி  பெண்களின் மகிழ்வுக்காக பெண்களின் மகிமைகளுக்காக  பண்டை காலம் தொட்டு பாரதத்தின் கலாச்சாரத்தில் கொண்டாட பட்டு வரும் பண்டிகை. அக்காலப் பெண்டிருக்கு அதுதான்  social party and interaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *