வீடு
அருண் காந்தி
முதுமையின் வாட்டம் வீட்டின் முதுகினில் தெரிந்திட
புதுமையின் கவர்ச்சியில் மனம் இடித்திட முனைந்தது.
கிறுக்கி விளையாடிய சுவரும் சாய்ந்திட
ஏறி விளையாடிய பெருங்கதவும் வீழ்ந்தது.
ஒளிந்திட ஏறிட்ட பரணும் சரிந்திட
கதை கேட்டு உறங்கிய திண்ணையும் பெயர்ந்தது.
தலைசாய்த்து அமர்ந்திட்ட தூணும் சாய்ந்திட
நாங்கள் கூடி வாழ்ந்திட்ட கூடமும் சிதைந்தது.
கடப்பாரையின் குத்தில் செங்கல் பிளந்திட
அதன் உடைந்த பகுதியில் குருதியும் வழிந்தது…! ஐயோ கடவுளே!
பாட்டன் இறந்தது அன்றெனக் கொண்டதும் பிழையோ?
அவர் உண்மையில் இறந்தது இன்றே அன்றோ?
===============================
படத்திற்கு நன்றி : http://cdn.wn.com
அருமை! உள்ளம் தொடுகின்றீர்!
Great