காக்கும் கடவுளாய்..
.
புதிது புதிதாய்க் கொடுப்பவன்
போரிட வேலினை எடுப்பவன்,
விதியை வேறாய் மாற்றுவான்
வீட்டினில் ஒளியை ஏற்றுவான்,
சதியை எளிதில் நைப்பவன்
சாதனை செய்திட வைப்பவன்,
பதியது செந்திலில் அருள்பவன்
பணிந்திடு, காப்பான் முருகனே…!
வங்கக் கடலலை வந்து தாலாட்டும்
வாச மலர்கள் மலர்ந்து மணமூட்டும்,
எங்குமே கூட்டம் கூடிக் கொண்டாட
ஏழையும் உயர்வுற நின்று வாழவைப்பான்,
திங்களைச் சூடிடும் ஈசன் திருமகன்தான்
தீதெலாம் அகற்றிடும் திருமால் மருமகன்தான்,
செங்கையில் வேலொடு அருளும் வேலவன்தான்
செந்திலம் பதியெனும் இத்திருத் தலமதிலே…!
படத்துக்கு நன்றி
http://rajeswari-amman-wallpapers.blogspot.in/2011/01/lord-muruga-saravanna-hq-wallpapers.html


“ஈசன் திருமகன், திருமால் மருமகன்” அருமையான சொற்றொடர் அமைப்பு. வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன்.
செந்திலம்பதி ஆண்டவனுக்கு
படைத்திட்ட பாமாலை
மிகவும் அழகு …