செண்பக ஜெகதீசன்
நட்டு வைத்தால் மரமாகி
நன்மை தருமொரு தோப்பாகும்,
வெட்டி வெட்டி எடுத்துவிட்டால்
வளரும் தோப்பொரு மரமாகும்,
கொட்டும் மழையும் குளிர்காற்றும்
கூடவே தந்திடும் மரமழித்துக்
கெட்டிட வேண்டாம், மரம்வளர்த்து
காப்போம் சுற்றுச் சூழலையே…!
படத்துக்கு நன்றி
http://topendsp.ipower.com/image/clipart/non-sporting/more/a-green-tree.gif.php
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…