காவிரி
குடகில் பிறந்து குன்றுகள் கடந்து,
குதித்துத் துள்ளிச் சமவெளி அடைந்து,
கயல்கள் சுமந்து கனிவுடன் தொடர்ந்து,
கதிர்தரு நெல்லுடை வயல்களில் நடந்து,
கடைமடை வரையிலும் கருத்துடன் புகுந்து,
கரையிரு மருங்கிலும் வாழும் மக்களைக்,
கடவுள் போலக் காத்தநற் காவிரி,
கருணை வறண்டு கவினை இழந்து,
கடலைக் காணா நிலையை அடைந்து,
கலியுக அரசியல் சூழ்ச்சியில் வீழ்ந்ததோ?
//கடலைக் காணா நிலை//
Awesome! முழுக்கவிதையுமே இந்த ஒரு வரியில் அடங்கிவிட்டது, சச்சி. 🙁
நன்றி இளங்கோ.