Author Archives: சச்சிதானந்தம்

மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை

மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை:                                          மக்களாட்சியின் உச்சகட்ட கேலிக் கூத்தினை நம் அன்னைத் தமிழகம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்காதா? என்று இயலாமையில் பெருமூச்சு விடும் சாமானிய மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் கடமை, ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது.                                        சட்டமன்ற உறுப்பினர்களை கூண்டோடு கடத்திச் செல்வதும், மிரட்டுவதும், விலை பேசுவதும் உச்சகட்ட கேலிக்கூத்து என்றால், இந்த கேலிக்கூத்தின் ஊற்றுக்கண் என்பது, மக்களின் அறியாமையும், இந்த அறியாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைபேசும் தற்போதைய தேர்தல் ...

Read More »

ஊடகங்களின் நாடகம்

உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி, முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி, பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு, கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று, சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி, எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்! நண்பர்களே….. கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல, கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்! இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை, இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்! உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை, உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்! இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும், நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று, சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும் ...

Read More »

நெளிவு சுழிவு…..

சச்சிதானந்தம்   நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன், வாழ்க்கையின் நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன், தெளிவை மனதில் உணர்ந்து விட்டேன், புதுப் பொலிவை கண்களில் அடைந்து விட்டேன், கொலுவில் வைத்த பொம்மையைப் போல், குறட்டை விட்டுத் தூங்கியதால், கனவில் கூட தோல்வியையே, காட்சியாகக் கண்டு வந்தேன், கடவுள் வந்து இடை இடையே , என்னைத் தட்டி எழுப்பி விட்டான், எழுந்து அவனை அனுப்பிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கி விட்டேன்! மருந்தைப் போல் வாழ்க்கையையே, விருப்பமின்றி வாழ்ந்து வந்தேன், மறந்தும் கூட உழைப்பதற்கு, முயற்சி செய்ய ...

Read More »

பரம்பொருள் பாமாலை-6

தண்டுவட மாகிநீ எனைநிற்க வைத்தாய், உண்டஉண வாகவே உதிரத்தில் சேர்ந்தாய், வண்டுதொட வாடிடும் அணிச்சத்தைப் போலவே, கண்டுமுனைக் காணாமல் நான்வாடி னேனே!                                                              33   பத்துவடி வெடுத்து நின்ற மாலுக்கும், பத்துசிர மெடுத்த இலங்கைக் கோனுக்கும், சித்துவடி வாகிமுழு முக்தியடைந் தோருக்கும், பித்துவடி வானமுது பரமனே துணை!                                                               34   கரிமுகனும் கந்தனும் இருபுறமும் இருக்க, திரிபுறம் எரித்தவன் உடலோடு இணைந்து, பரிமளம் மணக்கும் பார்வதியும் இருக்க, விரிமனம் கொண்டிந்த காட்சியைக் காண்போம்!                                                           35   வினோதத் தாண்டவனே, வெண்ணிலவைப் பூண்டவனே, ...

Read More »

அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு!

அன்புள்ள அம்மாவிற்கு,        தங்கள் வயிற்றில் உதிக்கும் பெரும்பேறு பெற்ற அன்பு மகன் சண்முகம் எழுதும் கடிதம். இந்தக் கடிதத்தை நானோ இல்லை என்னுடன் பிறந்த மற்ற எழுவரில் ஒருவரோ, தங்களுக்குப் படித்துக்காட்டத் தாங்கள் இவுலகில் இல்லை என்ற எண்ணம், இலந்தை முள்ளில் சிக்கிக் கொண்ட வெளவாலைப் போல என் மனத்தைக் கிழித்தாலும், அரூபமாக நின்று எங்களைக் காக்கத் தொடங்கி இருக்கும் தாங்கள் நிச்சயம் இம்மடலுக்குச் செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.       பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பெரும் செல்வம் சேர்க்கவில்லை எனினும், வாழ்கையின் ...

Read More »

பரம்பொருள் பாமாலை-5

நெல்வி ளையும் தென்னாட்டில் பூத்தவனை, வில்வ இலை வடிநீரால் பூசித்து, செல்வ நிலை கல்விபுகழ் பெற்று, வல்ல மையும் நல்வாழ்வும் பெறுவோம்!                                                                      25   நாட்டிய வேதத்தில் தோன்றிய நாயகனே, நீட்டிய பாதத்தால் தேவியை வென்றவனே, ஆட்டிய அரவத்தின் நஞ்சினை உண்டவனே, வாட்டிடும் துன்பத்தைப் போக்கிடும் ஆண்டவனே!                                                        26   நீருக்குள் ஊடுருவும் சூரிய ஒளியாய், உயிருக்குள் ஊடுருவும் வீரிய ஒளியே, பாருக்குள் நீயுலவிக் காப்பதை உணர்ந்தால், யாருக்கும் துன்பங்கள் தோன்றுதல் அரிது!                                                                     27   செவ்வேளின் வடிவத்தில் சிகரத்தில் நின்றாய், வெவ்வேறு வடிவத்தில் ...

Read More »

பரம்பொருள் பாமாலை-4

வானமா மலையில் பூக்கும் சிறுவானி, தூயகா விரியில் இணையும் பூவானி, பாயுமாப் பொதிகைப் பொருநை தண்வானி, போலவே குளிரும் ஈசன் திருமேனி!                                    17   சுற்றும் விண்ணோடு சுழலும் சிவனின், முக்கண் என்பதன் மெய்ப்பொரு ளறிந்தால், முத்தண் ணாறுகள் முறையாய்க் கூடும், பித்த வாதகபம் பரம்பொரு ளாகும்!                                   18   புங்கன் மர நிழலைப் போல, அங்கம் அது குளிர்ந்தவன் நீயே, பொங்கும் சுடர் நுதற்கண்ணோடு, குளிர் திங்கள் தனைச் ...

Read More »

பரம்பொருள் பாமாலை-3

இருளா சனமிட் டுயிரில் அமர்ந்த, பொருளா சையினைக் களையா தவரால், திருவா சகமா யுருவா னவனின், அருளா சியினைப் பெறுதல் அரிது!                                                                                9   பிச்சையும் பிடி சாம்பலும் கொண்டு, பித்தனாய் நாடு வீதியில் நின்று, கச்சையாய்ப் புலித் தோலைக் கொண்டு, நர்த்தனம் புரி நாதனைக் கண்டேன்!                                                                                 10   பனியா சனமே லமர்ந்தா னவனை, மணிநா வசைவோ டிசையா னவனை, கனியா மனதோ டிருப்போ ரினையும், இனிதா யணைத்துக் கனிந்திடச் செய்வான்!                                                                   11   நடரா சனுடன் நடமா டிடவே, சுடரா னவனுள் ...

Read More »

பரம்பொருள் பாமாலை-2

  நுதற்கண் கொண்டவனே, நூதன மானவனே, புறக்கண் காட்சிகளில், பூரணமாய் நிறைந்தவனே, அகக்கண் கொண்டெந்தன் ஐம்புலனை அடக்கி, முதற்கண் அடிபணிந்து வணங்குகிறோம் உன்னை!                                                      1   வட்டூர் வைரவனை வணங்கிப் பணிந்து, மொட்டாய் இருக்கும் மனமடலை விரித்து, கொட்டும் கருணை மழையில் நனைந்து, கட்டுண் டவனது அன்பில் கரைவோம்!                                                                                  2   ஆற்றில் தவழ்ந்த ஆதவப் பிள்ளையாய், ஆற்றல் நிறைந்த நாதனும் தவழ்ந்து, போற்றும் புகழ்மோர்ப் பாளையம் வந்து, சீற்றம் தணிந்து சீருடன் அமர்ந்தான்!                                                                                     3   மாசிச் சிவன் இராத்திரி தோறும், ...

Read More »

பரம்பொருள் பாமாலை-1

  முன்னுரை : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வட்டூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் வைரவநாதமூர்த்தியின்(பைரவர்)திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானைப் பற்றிப் பாடுவதாக மனதில் நினைத்து “பரம்பொருள் பாமாலை” என்னும் இச்சிறு தொகுப்பை எழுதுயுள்ளேன்.       சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மோர்ப்பாளையம், சேலம் மாவட்டம்  சங்ககிரி வட்டத்தில் உள்ள மோரூர் மகுடஞ்சாவடி அருகில் உள்ள கூடலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று அடியார்கள் ஆற்றில் நீராடச் சென்ற போது மரப்பேழை ஓன்று மிதந்து வரக் கண்டனர். அந்தப் ...

Read More »

குறவன் பாட்டு-28 (நிறைவுப் பகுதி)

குறவன் நகர வாழ்க்கையைக் கண்டு தனக்குள் வினவுதல்   அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம், அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம், அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும், அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!                        228   புரிந்து கொள்ளாத மணவாழ்க்கை மணக்கும், புரிந்த பின்னாலோ வடுவாகி நிலைக்கும், பிறந்த பிள்ளைகளோ பலநேரம் வதைக்கும், பிறப்பின் பொருளுணராப் பரிதாபம் எவர்க்கும்!                                                                                229   முறையற்ற மோகத்தில் மனதார வீழுகிறான், முடிவற்ற துன்பத்தை முதலாளாய்த் கோருகிறான், மறையுற்ற பொருளெல்லாம் இருளென்று பாடுகிறான், கறையுற்ற காமுகனாய்க் கண்மூடி வாழுகிறான்!                                                                              230 ...

Read More »

குறவன் பாட்டு-27

குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல் (சென்ற வாரத் தொடர்ச்சி) நீராவிக் குளியல்கள் நடத்திடலாம், கொஞ்சம் சீராகக் கேசத்தை அமைத்திடலாம், தொடர்ந்து ஈராறு மாதங்கள் அங்கு சென்றால், பூலோக ரம்பை என ஆகிடலாம்!                                                                                                                   220   வெள்ளரிப் பிஞ்சை வெட்டி எடுத்து வெண்ணையில் கொஞ்சம் தொட்டு எடுத்து, கண்களின் மேலே இட்டு எடுத்தால், காந்தப் பார்வை பெற்று ஒளிரலாம்!                                                                                                           221   அழகுக்குப் பொருத்தமாக, அங்கத்தை இறுக்கமாகத், தழுவி நிற்கும் உடை உண்டு! கழுத்துக்கு வெகுதொலைவில், தோளிரண்டில் நிற்காமல், நழுவி நிற்கும் ...

Read More »

குறவன் பாட்டு-26

குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல்   மாட மாளிகை மயக்கும் கேளிக்கை, காடு கண்டதில்லை, குறவர் கொண்டதில்லை, நாடி ஒடுங்கவே நடக்கும் சுமையில்லை, கோடி மக்களுக்கும் கவலை துளியில்லை !                                                                                      212   அதிகாலை வரைஉறங்க கானகத்தில் வாய்ப்பில்லை, அயர்ந்தாலும் பறவைகள் கண்மூட விடுவதில்லை, அகம்குளிரக் கண்ணுறங்கி, ஆசைதீர்ந்து எழுந்துவரும், அழகுமெத்தையில் புரண்டுறங்கும் வாழ்க்கை நகரிலே!                                                             213   எழுந்து சென்று உடல் நடுங்க, பொழிந்து கொட்டும் அருவிக் குளிரில், கலைந்தும் கலையா ஆடையுடன், நனைந்து உறையத் தேவை ...

Read More »

குறவன் பாட்டு-25

குறத்தி நகரப்பெண் உரையாடல் (சென்ற வாரத் தொடர்ச்சி) குறத்தி: நெல்லிக் கனியை முழுதாய் நானும், அள்ளிக் கைகளில் அன்புடன் தருகிறேன்!   மாங்கனி களையும் உங்கள் மனம்படி, பாங்குடன் பிரித்து எடுத்துத் தருகிறேன்!   எட்டுக் கட்டுக் கீரை எதற்கு? வீணாய் வாடிப் போகுமம்மா!                                                                                                     203   நகரப்பெண்: எட்டுக் கட்டுக் கீரைகளை, எத்தனை நாட்கள் ஆனாலும், கெட்டுப் போக விட்டிடாமல், காக்கும் கருவுயில் வைத்திடுவேன்!                                                                                                            204   குறத்தி: காக்கும் கடவுளை நானறிவேன், காக்கும் கருவியை அறியேனே! அப்படி என்ன கருவியது?                                                                                                                                   205 ...

Read More »

குறவன் பாட்டு-24

குறத்தி நகரப்பெண் உரையாடல்   நகரப்பெண்: கோடைக்கு இதமாய்க் குளிரூட்டப்பட்டு, இஞ்சிச் சுவையேற்றப்பட்ட மோர்கொண்டு வரட்டுமா குறத்தி? குறத்தி: ஏழைக்கு இறங்கும் இறைவனைப் போல, என்தாகம் தீர்க்கும் அன்பானதாயே, வணக்கம்!                                                                                   199 நகரப்பெண்: என்னில்லம் தேடி வருவோரின் தாகம், தீர்ப்பதென் கடமை, மனமார மோர்பருகு பெண்ணே! குறத்தி: இன்முகம் கொண்டு, இஞ்சிமணம் கொண்டு, வஞ்சமனம் இன்றி மோர் தந்ததால், என் தாகம், கவலை தீர்ந்ததம்மா!                                                                                                 200 நகரப்பெண்: காய் என்ன காயோ? சுவைக்கக் கனி என்ன கனியோ? சூட மலர் என்ன மலரோ கொண்டுவந்தாய்? ...

Read More »