க.பிரபு தமிழன்tamil-images

ஆட்சூழும் மானிட நட்பு
வேண்டாம் – தமிழெனும்
என் தாய் மொழியான
நீயே போதுமெனக்கு

பாரியும் ஆதவனும் சேர்ந்து
காட்சியளித்தாலும் வியக்க
மாட்டேன் – ஒரு சிறுபிள்ளை
தமிழில் கதைத்தால் போதும்
என் இதயத்தை அப்பிள்ளை
பேசும் வரை உறங்கச்
செய்வேன்

தமிழே நீ என்னுடனிருந்தால்
பசியில்லை சுவாசிக்க
காற்றும் வேண்டியதில்லை
நாவிற்கு தாகமில்லை
தொலைதூரம் நடந்தாலும்
கால்களும் கண்களும்
சோரவில்லை
உன்னைப் பற்றி எழுத
கைகளும் ஓயவில்லை
எழுத்தாணியின் கூர்மையும்
குறையவில்லை

என் உடலின் குருதியான தமிழே

உலகிற்கு பொன்னும் பொருளுமே
உயிர் செல்வங்கள்
எனக்கோ நீயே இவ்வுலகின் மிக
உயரிய செல்வம்

படத்திற்கு நன்றி
http://www.care4tech.com/dev-design/how-to-install-tamil-font-for-ms-office-video-tutorials/492/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தமிழ் என்னுயிர்

  1. ////உலகிற்கு பொன்னும் பொருளுமே
    உயிர் செல்வங்கள்
    எனக்கோ நீயே இவ்வுலகின் மிக
    உயரிய செல்வம்/////

    தமிழ் நம் உயிருக்கு நேர்!!. மிக அற்புதமான, உணர்வு பூர்வமான கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி!!

  2. கடைசி 4 வரிகள் என்னை கற்சிலையாக்கியது. அவைகளை உற்று பார்த்தவண்ணம் அப்படியே அசைய மறந்துவிட்டேன். . ஒரு உடம்புக்கு உயிர் ஒரு நூலிழைப்போல் ஒரு கவிதைக்கு உயிர் கொடுப்பது இது போன்ற ஓரிருவரிகள் மட்டுமே.அருமையான வரிகள்.

  3. இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்! என்ற  தமிழ்விடுதூதின் வரிகளை நினைவு படுத்தியது கவிதையின் கருத்து, கவிதையின் எளிய நடை சிறப்பு.  வாழ்த்துக்களும் பாராட்டுகளும் கவிஞருக்கு.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. என் அன்பான தோழர் தோழிகளே,
    உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி மற்றும் வல்லமை இனயதளத்திற்க்கும் மிக்க நன்றி இனி தடையமில்லாமலிருக்கும் எனது படைப்புகளை பதிவு செய்கிறேன்.

    அன்புடன்
    க.பிரபு தமிழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *