ஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு!

12

வெங்கட் சாமிநாதன்

இம்முறை மூன்று பேர்களின் கதைகள் முன் நின்றன. ஒன்று பார்வதி ராமச்சந்திரனின் சரயு, பழமை பேசியின் பேச்சி, தேமொழியின் அனிச்ச மலர்கள். தேர்ந்த கையான பழமை பேசியின் பேச்சி யில் கிராமத்து சூழல் மிக அடர்த்தியாக எழுப்பப்பட்டிருக்கிறது. கதையென்று ஏதும் இல்லாது சூழல் கொஞ்சம் அதிகமாகவே அடர்த்தி கொண்டுள்ளது. அனிச்ச மலரில் பிராமணப் பெண் என்று அழுத்திச் சொல்ல வேண்டாத இடங்களில் எல்லாம், பள்ளிக்கூடத்தில் கூட பிராமணப் பேச்சு வலிந்து புகுத்தப்பட்டுள்ளது. சிறு பெண்கள் சித்திரம் தடித்த கோடுகளால் வரையப்பட்டுள்ளது. மூன்று பேரில் பார்வதி ராமசாந்திரனின் சரயு கதை தான் சாதாரணமாக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வையும் அதன் பாரம்பரிய சிக்கல்களையே சொன்னாலும் குறைந்த சொற்களில் திறம்படச் சொல்வதில் வெற்றி கண்டுள்ளது.

என் தேர்வு பார்வதி ராமச்சந்திரனின் சரயு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

பழமை பேசி, தேமொழி இருவருக்கும் கூட என் வாழ்த்துக்கள்.

கடந்த ஒரு வருட காலத்தில் மூன்று நான்கு புதிய திறன்களைக் கண்டு கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்..

போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகள்:

2.

உறக்கத்திலோர் உளறல் !!!

3.

ஓடிப் போன புத்தர்

4.

“பத்ரமா இருங்கப்பா!”

5.

நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

6.

அந்த நூறு நாட்கள்!

7.விடுகதை!…

8.

சரயு…

9.

ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

10.

முசுட்டுத் தாத்தா …

11.

நன்றி

12.

புரியாத புதிர்

13.

டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!

14.

பேச்சி

15. ‘நீர்’

17. அனிச்ச மலர்கள்

 

அன்பு நண்பர்களே,

வணக்கம். இப்பொழுதுதான் போட்டி ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடிவிட்டது. முதன் முதலில் நாம் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எழுத்தாளர் திரு வையவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் உடனே மிக உற்சாகமாக, “நல்ல விசயம்தானே உடனே செய்யுங்கள், அதற்கான பரிசுத் தொகையும் அறிவித்துவிடுங்கள். எங்கள் டிரஸ்ட் மூலமாக நான் கொடுத்து விடுகிறேன். அதுமட்டுமல்லாமல், மாதம் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கும் 100 ரூபாய் பரிசு வழங்கலாம், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிடலாம்” என்று மனமுவந்து கூறினார். உடனடியாக அந்த மாதமே போட்டி ஆரம்பிக்கப்பட்டது, இதே ஜூலை மாதம் 2012ம் ஆண்டு. சிறுகதைப் போட்டிக்கு பல படைப்பாளிகள் தங்கள் அற்புதமான படைப்புகளை வழங்கி இப்போட்டியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றனர். போட்டிக்கான பரிசுக் கதையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முதுபெரும் எழுத்தாளர், மிகச் சிறந்த விமர்சகர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் காலந்தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் அனைவருக்கும் நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இப்போது அடுத்தக் கட்டத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நகர்கிறது. விரைவில் அதற்கான முடிவும் அறிவிக்கப்படும். இதுவரை போட்டியில் தங்கள் பங்களிப்புகளை அளித்துள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து நம் வல்லமைக்கு ஆதரவு அளித்து வரும் நம் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் பலப்பல நல்ல நல்ல படைப்புகளை தங்களிடமிருந்து எதிர் நோக்கி காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே.

 

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “ஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு!

  1.  வல்லமை மின்னிதழுக்கும், தங்களுக்கும், திரு.வெ.சா அவர்களுக்கும்,   என்ன சொல்லி நன்றி தெரிவிப்பதென்றே தெரியவில்லை. மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம். தாங்கள் என் எழுத்துக்களுக்குக் கொடுத்திருக்கும் பேராதரவுக்கு என் இதய ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. இந்த மாதத்தின் சிறந்த சிறுகதையைப் படைத்த திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    கதையின் எழுத்து நடைக்காகப் பாராட்டப்பட்டுள்ள திரு.பழமைபேசி மற்றும் திருமதி.தேமொழி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    அடுத்த கட்ட முடிவுகளை அறியும் ஆவல் இப்பொழுதே மனதில் ஏற்பட்டுவிட்டது.

  3. வாழ்த்துகள் பார்வதிராமசந்திரனுக்கு.. கதை நடைக்காக பாராட்டுபெற்றுள்ள தேமொழிக்கும் பழமைபேசிக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்!

  4. பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாதம் ஒரு கதாசிரியரை தேர்ந்தெடுத்து படிக்கும் மற்றவருக்கும் கதை எழுத ஆவல் தூண்டி விடும் வல்லமை ஆசிரியர் குழுவுக்கும் பாராட்டுக்கள்.

    போட்டியில் ஆக கடைசியாக இருந்த 3 கதைகளுமே சலிப்பில்லாமல் படிக்க வைத்த கதைகள். மற்ற இரு கதாசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  5. ஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு! தலைப்பு கட்டுரையில் ஆசிரியர் மதிப்பிற்குரிய பவள சங்கரி அவர்கள் குறிப்பில் ////”“ மாதம் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கும் 100 ரூபாய் பரிசு வழங்கலாம், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிடலாம்” என்று மனமுவந்து கூறினார். உடனடியாக அந்த மாதமே போட்டி ஆரம்பிக்கப்பட்டது///

    முகப்பில் பரிசு தொகை 1000 என்று உள்ளது. கவணிக்க வேண்டுகிறேன்.

  6. பார்வதிக்கு வாழ்த்துக்கள். 
    பழமைபேசிக்கும் வாழ்த்துக்கள். 
    ஏதோ நாமும் எழுதிப் பார்க்கலாமே என்று ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்து என் போன்றவர்களையும் முயச்சி செய்ய வைத்த வல்லமைக்கும், அதற்குத் தனது ஆதரவை அளித்த ஐக்கியா நிறுவனருக்கும் நன்றிகள்.
    எல்லாவற்றிகும் மேலாக புகழ் பெற்ற இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களால் என் கதைகள் படிக்கப்பட்டு, நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி  வழிநடத்தப்படும் வாய்ப்பு கிடைத்ததற்கு வல்லமை நிர்வாகக் குழுவினருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  7. அன்பு நண்பர்கள் சச்சிதானந்தம் , ஷைலஜா, தனுசு ஆகியோர் தெரிவித்த ஊக்கமளிக்கும் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  8. சிறந்த சிறுகதைக்குப்
    பரிசுபெறும் படைப்பாளி
    பார்வதி இராமச்சந்திரனுக்குப்
    பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்…!

  9. சிறந்த கதாசிரியராய்த் தேர்வு பெற்றுள்ள பார்வதி இராமச்சந்திரனுக்கு உளம்நிறை வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!
    கதைச் சூழலுக்கும், நடைக்கும் பாராட்டுப் பெற்றுள்ள பழமைபேசி, தேமொழி ஆகியோர்க்கும் என் மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

  10. வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கிய அன்பு உள்ளங்கள் திரு.சச்சிதானந்தம், திருமதி.ஷைலஜா, திரு.தனுசு,திருமதி.தேமொழி, திரு.செண்பகஜெகதீசன், திருமதி.மேகலா இராமமூர்த்தி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.பழமைபேசி அவர்களுக்கும் தேமொழிக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

  11. தெரிவாளர், பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். களம் அமைத்துக் கொடுத்தவர் அனைவருக்கும் நன்றிகள்!!

  12. அன்பு பார்வதி ராமசந்திரனுக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *