இலக்கியம்பத்திகள்

குடும்பத்தில் ‘சுதந்திர நாள்”

விசாலம்

“ஏண்டி ராஜி, கோபாலன் தில்லிலேந்து எப்ப வரான்”

“அவனாம்மா ,அவன் புதங்கிழமை வராம்மா, வியாழக்கிழமை  இன்டிபெண்டன்ஸ்டே வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு எடுத்துண்டாக்க ஸன்டே வரை இருப்பான் என் அண்ணா”

“அண்ணாவும் தங்கையும் என்ன புரோக்கிராம் போட்டிருக்கேள்?

“தெரிலைம்மா நான் எங்கேயாவது மால் போய் எஞ்ஜாய் பண்ணிட்டு வருவேன் என் பிரண்ட்ஸ்க்கு போன் செய்யணும்”

“ஏண்டி ராஜி இது எத்தனாவது வருஷ சுதந்திரம்”? “யார் கண்டா? மறந்து போச்சு. இரு, இரு, 1947ல்ல சுதந்திரம் வந்ததா? இப்ப 2013.  அப்படீன்னா 66 வருஷம் இல்லையா?’                                                                                                                                                                                                                                                                           “அடி சமத்து கணக்கு வந்துடுத்தே நல்ல வேளை கால்குலேடர் வச்சுக்கலை. யார் யார் இந்த போராட்டம் ஆரம்பிச்சா தெரிமா?”

“காந்தி, நேரு அப்பறம் யார் யாரோ…..இந்த சோஷியல் சயின்ஸே போர். எப்படியோ நமக்கு ஒரு லீவு கிடைக்கறது. அதான் சுகம். ஆமாம் அன்னிக்கி நீ என்ன பண்ணுவே”

                                                                                                                                                                                                                                             “நல்ல வேளை அன்னிக்கு மறு நாள் வரலட்சுமி நோம்பு முதன் நாளே பல காரியம் செஞ்சு வச்சுக்கணும் எல்லோருக்கும் லீவு இருக்கு அதனாலே நிதானமா சமையல் செய்யலாம் ஆனா என்ன அன்னிக்கு ஒரு சீரியல். சினிமான்னு ஒன்னும் பாக்கமுடியாது'”அம்மா திரும்ப திரும்ப  காந்தி. இந்தியனுட்டு ஒரே மாதிரி படம் காட்டுவா. புதுசா என்ன காட்டப்போறா. நான் புது ரிலீஸுக்கு போய்விடுவேன்’

“அப்படி சொல்லாதேடி ராஜி,  அந்த மாதிரி படம் பாத்தாலாவது நாட்டுபற்று வருமோன்னு காட்டறா. நல்ல விஷயம் தானே”

“எங்கம்மா நாட்டுபற்று இன்னிக்கு நாடு எந்த நிலமைல இருக்கு எல்லாரும் கோடி கோடியா பணம் பண்றதே தொழிலா வச்சிண்டிருக்கா,  பேப்பர்ல  பாரு, யார் ஒழுங்கா இருக்கா”, நீங்கள்லாம் தான் வருங்கால இளைஞர்கள் நீங்கதான் நாட்டை சரி பண்ணனும் நீங்களே

நாட்டுபற்று இல்லாம சுதந்திர நாளிலேயும் சுத்தினா எப்படி ?’

“அம்மா திங்க என்ன இருக்கு? பகோடா இருக்கா “

“வாடப்பா கடைக்குட்டி .முரளி என் செல்லமே! லீவெல்லாம் கிரிக்கெட் தானா உன் கையும் மூஞ்சியும் பாரு ஒரே மண்ணு ….சரி நாளைக்கு என்ன புரோக்கிராம்?”

“நாளைக்கு காலம்பற மேட்ச்சு ஜயிக்கறவா டிரீட் தருவா……. அப்பறம் ஈவினிங்கல  பட்டம்  விடப்போறாம் “

“ஏண்டா முரளி எந்த வருஷம் நமக்கு சுதந்திரம் கிடைச்சுது தெரிமா உனக்கு, சொல்லு பாக்கலாம் “

“தெரியுமே எனக்கு 1947. நேத்திக்குத்தான் எங்க டீச்சர் சொன்னா அதுக்குள்ள மறந்துவிடுவேனா  அக்கா” “சரி தமிழ் நாட்ல சுதந்திர போராட்டத்தல யார் யார் கலந்திண்டா  ஏதாவது ஒருத்தரை சொல்லு, ‘

போ அக்கா’ இப்ப எனக்கு பசிக்கிறது  யார் யார் கலந்திண்டா உனக்கு என்ன இப்ப!  அப்பறம் சொல்றேன் அம்மா எங்கே பக்கோடா”

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா………….” அம்மா  உன் போன் குரல் கொடுக்கறது   எடு எடு  “

“நீயே பாரேன்டி  நான் வேலையா இருக்கேன்னு தெரியுமோனோ”

“அம்மா  அண்ணா தில்லிலேந்து பேசறான்…….அண்ணா எப்படி இருக்கே  என்ன ஏர்போர்ட்டுக்கு வந்துட்டயா  ஆ மஜாதான் நாளைக்கு   என்ன புரோக்கிராம்?

“ராஜி ஹவ்வார் யூ ? டுமாரோ  ஐ வில் மீட் மை பிரண்டஸ் அண்ட் கோ டு மால் . அங்க வந்துட்டு பேசறேன் அப்பாட்ட போன் கொடு”

“டாடி வெளில  போயிருக்கா . ஏதோ  சுதந்திர போராட்டத்ல கலந்த குடும்பத்த  பாக்க போயிருக்கா “

“ஓகே மம்மீட்ட கொடு”, “மம்மீ நான் இன்னிக்கு வந்துடுவேன் நாளைக்கு உன்ன அழைச்சுண்டு விஜய் படத்துக்கு போறேன் சரியா “

“நான் வரலை ரமேஷ்  வீட்ல வேலை சரியா இருக்கும் மறுநாளைக்கு பூஜை வேறு உனக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லு உனக்கு பிடிச்சதை செஞ்சு வைக்கறேன் அதுவே  எனக்கு ஆனந்தம்  சரி போனை வச்சுடறேன்.”

“மம்மீ மம்மீ டாடி வந்தாச்சு    என்ன டாடி சுதந்திர போராட்ட பேமிலியை பாத்தேளா? எப்படி இருக்கா?

“அதையேன் கேக்கறே ஒரு சந்துல வீடு சுவரலெல்லாம் உடைஞ்சிருக்கு. ஏதோ பென்சன்னு கொஞ்சம் பணம்தான் கிடைக்கறதாம் வீட்ல எல்லோருமே ஜெயிலுக்கு போய் அடி வாங்கி வந்தவர்கள் தானாம், அப்படி நாட்டுக்காக போராடியவர்களின் கதி இப்படியா?”

பேசிண்டே டாடி ஏணி போட்டு எங்க மேலே ஏற்றேள்”,

“அதுவா  உன் தாத்தாவும் பாட்டியும் சுதந்திர போராட்டத்தில் கலந்துண்டு கொடிப்பிடித்து வந்தேமாதரம்ன்னு கோஷம் இட்டவர்கள் உன் பாட்டி தன் நகைகள் எல்லாம் அதற்கென்று கொடுத்துவிட்டாள் அவர்கள் போட்டோவை எடுத்து தூசி தட்டி நாளைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்து  கொண்டாடப்போறேன். அதுதான் நாளைக்கு என் புரோக்கிராம் அவர்களுக்குப்பிறந்த நான் இது செய்யாமல் விடுவேனா?”?

“மம்மி’  இங்க வாயேன்  ஒருத்தரும் சுதந்திர தினத்தைக்கொண்டாடவில்லை என்று மனசுல வருத்தப்பட்டயே இதோ அப்பா கொண்டாடப்போறார் “

“அப்பாடி வீட்ல ஒருவருக்காவது இந்த உணர்வு இருக்கே. நாளைக்கு உங்க பாட்டிக்கு பிடிச்ச போளி செஞ்சுடறேன் “

“வந்தே மாதரம்”  “ஜெய் ஹிந்த்”

“முரளி நானும் சேர்ந்துக்கறேன். “வந்தே மாதரம்”,  “ஜெய்ஹிந்த்”. அம்மா அப்பா வாங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லலாம் “

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  அடடே 🙂 ஆத்துல ஒத்தருக்காணும் தேசாபிமானம் இருக்கே. சரி top ten movies style ல எதாவது nick name வக்கனுமே? புள்ளாண்டான் முரளி – சமத்துக்கொடம். ராஜி பண்டாரம்; கோபாலன் – அசட்டுச்சும்பன் 🙂 🙂

  சும்மா 🙂

  என்னுடைய பாட்டியும் தான் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி கொடுத்தார். அந்த காலத்தில் யோசிக்காமல் செய்தார்கள். அவர்களுக்கு நமது நன்றியறிதலை ஒருநாள் மாலை போடுவதில்தான் வைத்திருக்கிறோம். பூனைக்கு மணிகட்டிய கதைதான். பெரிய அளவில். இந்த தேசத்தை அந்த அம்பாடிக்க்ருஷ்ணனும் வடக்குன்னாதனும் ரக்ஷிக்க வேணும் என்று பிரார்த்தித்து கருத்துரையை முடிக்கிறேன்.

  பணிவன்புடன்
  புவனேஷ்வர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க