கோகுலாஷ்டமி சிறப்புப் பகிர்வு
சு.ரவி
வணக்கம் வாழியநலம்
“இதழ்த்தா மரைக்குள் கரத்தா மரையால்
பதத்தா மரைசுவைக்கும் பாலன்- மிதக்கின்றான்
ஆலிலைப் பாய்மேல்; அவனுங்கள் இல்லத்தில்
காலிணை வைப்பன் கனிந்து.”
“பண்வாய் இடைச்சி பரவசமாய்க் கண்ணனைக்
கண்ணம்மா ஆக்கிக் களிக்கின்றாள்!- எண்ணில்
இகம்பரம் கடந்த பரம்பொருள் இங்கே
திகம்பரமாய் நிற்கின்ற தே!”
ஓவியமும் கண்ணன் பாசுரமும் திரட்டிபாலென இரட்டிப்பாய் இனிக்கிறது. வாழ்த்துக்கள்
ஆரமும் முத்துமாலையும் ரத்தின மோதிரமும் கங்கணமும் வைர வளையுமாய் கண்ணனுக்கு அணிவித்து மகிழும் யசோதையின் புன்னகைக்கு மதிப்பேது?. ஓவியங்கள் அழகு. கவிதைகள் அருமை!!. மிக்க நன்றி!!