எஸ். கோதண்டராமன்

 

1 டிர்ரிங்.. டிர்ரிங்..

“ஹலோ”

“மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

“அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர………….. ”

“சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”

“இதுவும் ப்ரொபஷன் தானே. ”

“சாரி, டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”

2 டிர்ரிங்.. டிர்ரிங்

“ஹலோ”

“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

“அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”

“பி.டெக். எந்த காலேஜ்? ”

“சேலம். ”

“சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”

 

3 டிர்ரிங்.. டிர்ரிங்

“ஹலோ”

“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

“அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”

“வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”

“பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”

 

4 டிர்ரிங்.. டிர்ரிங்..

“ஹலோ”

“ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”

“ஒரு நிமிஷம். ”

“பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”

“பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”

“என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”

 

5 டிர்ரிங்.. டிர்ரிங்..

“ஹலோ”

“நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”

“என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”

“அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”

“என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”

“அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”

“என்னடி சொல்றே நீ? ”

“ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”

“ஏண்டி? என்னடி ஆச்சு? ”

“பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”

“என்னடி சொல்றே? ”

“கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”

“ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி?

“அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான்.  நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க”

 

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “பணப்பொருத்தம்!…

  1. இன்றைய காலக் கட்டத்தில், திருமணங்கள் எவ்வாறு நிச்சயிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது கதை. பெற்றோரின் பணப்பொருத்தம் பார்த்து நிச்சயிக்கும் மனப்பான்மை, இளைய தலைமுறையினரின் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ மனப்போக்கு இரண்டும் அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. ‘இது எங்கு போய் முடியும்?’ என்ற ஆழ்ந்த கவலை ஏற்படுகிறது. பகிர்விற்கு மிக்க நன்றி.

  2. ஐந்து தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவே கதையினை சொல்லிவிட்ட பாங்கு அருமையாக இருக்கிறது, புதுமையாகவும் இருக்கிறது.
    ஆறு மாதம் பேசிப் பழகியும் மற்றவரை எடை போடத் தெரியாத பெண்ணினால் அனைவருக்கும் மன உளைச்சல்.

    அன்புடன்
    ….. தேமொழி

  3. இன்றையப் பந்தங்கள் ஒப்பந்தங்களில்!
    நாளையப் பந்தங்கள் என்ன ஆகுமோ?
    ஆன்மீக ஆண்களின் வருக்கங்கள்
    தற்காலப்  பெண்களின் வருத்தங்களோ
    மனப் பொருத்தம் வேண்டாம்
    இனப் பொருத்தம் வேண்டாம்
    மணம்புரிந்திடப் பணப்பொருத்தம் 
    பார்க்கும் பெற்றோர்களும் பெண்களுக்குமே
    இதற்கு வித்து………………..
    என்னப் பொருத்தம் இதில் என்னப் பொருத்தம்!
    வாழ்க்கையென்னும் நாடகத்தில் வில்லன்கள் வருமே!

  4. “பெண்ணே, மஹா பாக்யவதியே, ஏழு அடிகள் என்னோடு நீ எடுத்து வைத்து விட்டாய், நீ எனது தோழியாகி விட்டாய், நான் உனது தோழன்;………”

    “In sickness and in health, in weal and woe, until death do us part”……..

    Oh! Pardon me. Am I ranting irrelevant stuff here?

  5. நிதர்சனம்.
    இதை எல்லாம் படிக்கும் போழ்து சற்று பயமாகத் தான் உள்ளது.
    இன்றைய “பொண்கள்” இந்த அளவு அக்குறும்பு பண்ணுவது மறுக்க முடியாதது. உடனே, அந்தக் காலத்தில் ஆண்கள் பண்ணலையா என்று சில பெண்கள் பாய்கிறார்கள். “ஆரு செஞ்சாலும் தப்பு தப்புத் தான்”.
    வாழ்க்கைக்குப் பணம் வேண்டும். பணம் ஈட்ட பட்டம் இன்று வேண்டும். ஆனால் அது மட்டுமே ஒரு மனிதனாகி விடுமா? ஒரு மனிதன் என்பவன் அவனது பட்டமும் சம்பளமும் தானா? குணம், பண்பு இதெல்லாம் வேண்டாமா?
    எவ்வளவு சம்பாதித்தாலும் “ஒத்தைப் பைசா” கூட வருமா? இந்த உடம்பு உட்பட பாழிடத்தில் துருப்பிடித்த கரியாப்பிய தகர கூரையின் கீழ் குப்பை குலத்திற்கு நடுவில் விட்டு விட வேண்டியது தான்.
    “பற்றித்தொடர்வது இருவினை பாவ புண்ணியமுமே”. நான் பட்டினத்தார் ஆகா சொல்லவில்லை. பக்குவம் அடைய தொடங்கலாமே என்கிறேன்.

    ஒரு பக்கம் சம அந்தஸ்து வேண்டுமாம். மற்றொரு பக்கம் அவர்களுக்கு கீழே படித்த மாப்பிள்ளை/குறைவாய் சம்பாதிக்கும் மாப்பிள்ளை என்றால் எகத்தாளம்.

    பணத்தையும் படிப்பையும் மட்டுமே வைத்து மனிதனை எடை போடும் மனங்கள் திருமணத்திற்கு, ஏன், எந்த உறவுக்குமே தகுதி அற்றவர்கள்.

    “மா குரு தன ஜன யௌவன கர்வம்
    ஹரதி நிமிஷாத் கால சர்வம்”……….
    …………………………………………………………………………….
    “I have wealth, most beauteous wife, handsome person, docile kids…….. heap of wealth that rivals the mount of Meru………….”
    “So what? So what? So what? So what?”
    தத: கிம்? தத: கிம்? தத: கிம்? தத: கிம்?”

    க்ரியதே நாராயணஸ் ஸ்துதி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *