இவரின் இயற்பெயர் ‘ரவீந்திரநாத் தாகூர்’. வங்கதேச எழுத்தாளரின் நினைவாக அவரைப் போன்றே இலக்கியத்தில் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற அவாவில் இவ்வாறு பெயரிடப்பட்டது. கிராமத்துக் கலாசாலையில் அது இரவீந்திரன் என உபாத்தியாயர்களால் மாற்றியமைக்கப்பட்டது, பின்னர் நம்பிக்கை கூகிள் குழுமத்தில் அது ரிஷி ரவீந்திரனாய் மாறியது.
பேராசானாய் இருந்தபொழுது இவர் எழுதிய Entrophy, Are We Alone…? (About ET) ஆகிய அறிவியல் கட்டுரைகள் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தன. இவர் எழுதிய The Art of Excellence, Mind Engineering, The Art of Studying, A Complete Journey towards Truthful Truth ஆகிய தொடர் கட்டுரைகள் புகழ்பெற்றவை. அக்கட்டுரைகளில் The Art of Excellence, Mind Engineering ஆகியவற்றை நியூயார்க்கில் இருக்கும் ஒரு பதிப்பகம், விரைவில் புத்தகங்களாய் வெளியிட உள்ளது.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் பல நடத்தியிருக்கின்றார். தற்பொழுது அமெரிக்கா வாசம். ஆந்திரப் பல்கலையில் மேல்நிலை அறிவியலில் பெளதிகமும் சிறப்புப் பாடமாக தொழிற்சாலை மின்னணுவியலும் பயின்றுவிட்டு, சிறிது காலம் பேராசிரியர் பணி. அதன் பின்னர், NITIE, Bombay யில் கணிப்பானியல் கல்வி. தற்சமயம் மென்பொருள் பணி.