ராதை பிறந்தாள் !கோதை பிறந்தாள்!

சத்திய மணி

 

(ஸ்ரீஜெயந்தி வருமுன்னர் அவசரமாய் ராதைப் பிறந்தாளா?…ஆம் ராதை எங்கே
கண்ணன் அங்கே…..)
ராதை பிறந்தாள் குட்டி ராதை பிறந்தாள்images (1)
புதுக் கீதங்கள் பிறந்ததம்மா
கோதை பிறந்தாள் கிளிக் கோதை பிறந்தாள்
இனிக் கண்ணனுக்கு சந்தோஷமா? ()

கன்னித் தமிழோ இல்லை நெல்லைத் தமிழோ
சென்னித் தமிழோ இல்லைச் சென்னைத் தமிழோ
ஆசைத் தமிழோ இல்லை ஓசைத் தமிழோ
பூசைத் தமிழோ இல்லைப் பாசத் தமிழோ
கேட்கும் இனிமேல் அதைச் சேர்க்கும் கவிமேல்
பூக்கும் மடிமேல் தம்பி பாடப் பழகு()
ராக்கன் இசையோ இல்லை ஜாக்ஸன் இசையோ
காக்கும் ரங்கனின் திருப் பாவை இசையோ
நாக்கில் உதிர்க்கும் கண்ண தாசன் இசையோ
நாட்டை எழுப்பும் மீசைக்காரன் இசையோ
கேட்கும் மழலை இனி சேர்க்கும் குழலை
தூக்கம் மடிமேல் தாலாட்டப் பழகு

 

 

2 thoughts on “ராதை பிறந்தாள் !கோதை பிறந்தாள்!

  1. அழகிய கவிதைக்கும், கவிதையின் நாயகியான குட்டிப் பாப்பாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published.