பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

எஸ். கண்ணன்

தில்லி மாணவி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப் புத்தியில் சில விமர்சனங் களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவே சப் பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரண மடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சி யளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்க ளும், பொதுமக்களில் சிலரும் இடதுசாரி சிந் தனையாளர்களும், போராடி வருகின்றனர்.

ஒருநாள் நடத்தும் ஆவேசப் போராட்டங்கள் கடந்து, சில நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து என்ன கருதுகிறோம்? சட்டம் செய் யும் கடமைகளையும், சட்டத்தை மீறாத மன நிலையையும் மக்கள் மனதில் உருவாக்கிட என்ன செய்யப் போகிறோம்? என்ற துணைக் கேள்விகள் விவாதிக்கப் படாமல் இப்பிரச் சனைக்குத் தீர்வு காணமுடியாது..ஜே.எஸ் வர்மா தலைமையிலான குழு வெகுவிரைவில், தனது பரிந்துரைகளை அளித்தது. வழக்கம் போல் அரசு தனது, இயந் திரங்களான ராணுவம், காவல்த் துறை ஆகி யோரின் பாலின அத்துமீறல்களை நியாயப் படுத்தும் விதத்தில், அவசரச் சட்டத்தை முன் வைத்து, வர்மா குழுவின் அறிக்கையை நீர்த் துப் போகச் செய்து விட்டது.

ஏற்கனவே குழந் தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை, 2012 முதல் பாதியில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்பும் கூட, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளா வது குறையவில்லை என்பது கவலைக்குறி யது. இவை சொல்லும் செய்தி இந்தியாவில் சட்டங்களைக் கடந்த அணுகுமுறைத் தேவைப் படுகிறது என்பதாகும். இந்திய உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் அரசுக்கும், விசாகா மற்றும் குழுவினருக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கி சில வழிகாட்டுதல்களையும் 1997 ன் போதே கொடுத்துள்ளது. பணிபுரியும் இடங்களில், பெண்கள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவு வழங்கியுள்ள “சுயமரியாதையுடன் கூடிய வேலை என்ற அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகை யில் பாலியல் பலாத்கார நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும், அனைத்து விதத்திலும் பெண்கள் மீதான பாரபட்சத்தை ஒழித்திடும் வகையிலும், ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர் மானத்திற்கு, இந்திய அரசு 1993 ல் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, பெண்கள் சம உரிமை கொண்டவர்களாக மதிக்கப் பட வேண்டும்”, என உச்ச நீதிமன்றம் வலி யுறுத்தியுள்ளது.

ஆனாலும் இந்தியாவில் பாலி யல் வன்கொடுமைகள் பணிபுரியும் இடங் களிலோ, இதர பகுதிகளிலோ குறையவில் லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் வெளிப்படுத்து கின்றன. இதற்குக் காரணம், சட்டங்கள் குறித்தும், தண்டனையின் காலம் மற்றும் தன்மை குறித்தும் நம் சமூகத்தில், பெரும் பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதை, திரைஅரங்குகளில் அரசு செய்திப்பிரிவின் விளம்பரமாகவோ அல்லது தொலைக்காட்சி மற்றும் எஃப். எம். ரேடியோக்களில் விளம்பரங் கள் செய்தோ மக்களைச் சென்றடையச் செய்திருக்க முடியும். அடுத்தடுத்த ஆண்டுக ளில் பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலமும் இளம் தலைமுறையை நெறிப்படுத்த முயன் றிருக்க முடியும்.அரசுகள் இவை குறித்து கவலை கொள் வதில்லை.

இதனால் ஒருநாள் செய்தி என்ற அளவில் மட்டும் பல சட்டங்கள் குறித்த விவா தம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து மக்கள் மன தில் நீடித்து நிற்கும் வகையில் இடம் பெறாமல் ஒதுக்கப் பட்டு விடுகிறது. குறிப்பாக பண் பாட்டு ரீதியில் பெண் ஆணுக்குக் கீழான, இரண்டாம் பாலினம் என்பதும், அவள் ஒரு நுகர்வுப் பொருள் என்ற கருத்தும் ஆழமாக வேர்பரப்பி நிற்கும் இந்திய சமூகத்தில், அரசுகள் எடுக்கும் மேற்குறிப்பிட்ட நடவடிக் கைகளுடன், மேலும் இரண்டு வித நடவடிக் கைகள் உடனடியாகத் தேவைப் படுகின்றன. ஒன்று பெண் ஆணுக்கு இணையானவள் என்ற கருத்தை நிலை நிறுத்துவது. இரண்டு ஆண், பெண் உடல் குறித்த பாலின புரி தலுக்கானக் கல்வி. இது குறித்து இன்றளவும் முழுமையான ஏற்பு மனப்பான்மை உருவாகவில்லை. அவ் வளவு எளிதானதும் அல்ல.

ஆனால், உடல் கவர்ச்சி குறித்து விளம்பரங்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறைய, பாலினம் குறித்த அறிவு தேவைப் படுகிறது. விளம்பரம் மற்றும் திரைக்காட்சி அமைப்பு, தனிநபரின் அந்தரங் கங்களை, காட்சிப் படமாக்கி கையில் உள்ள செல்போன் மூலம் ஒளிபரப்புகிற ஏற்பாடு, ஆகியவை அதிகரித்துள்ளதை, அனைவரும் அறிவோம். ரெய்டில் ஆபாச சி.டிக்கள் பிடிபட் டன என்பதை ஊடகங்களில் தொடர்ந்து செய் தியாவதையும் கவனித்து வருகிறோம். இந்தச் செயல்களை மாற்றுவதற்கும், ஆரோக்கிய உறவை உருவாக்கவும், மனவிருப்பங்கள் எதிர் பாலின கவர்ச்சியைக் கடந்து நீடித்து நிற்கும் உறவு என்பதைப் புரிந்து கொள்வதற்கும், பாலியல் குறித்த கல்வித் தேவை படுகிறது.

ஆண், பெண் உடல் குறித்து, உடலியல் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கல்விமுறையின் மூலம் தான் அதி கரிக்கும் என்பதே அனுபவம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் சகாரா பகுதி நாடுகளில் 33 சதமான பெண்கள் 18 வயதை அடைவதற் குள்ளாகவே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளா கினர் என்றும், பாலியல் கல்வி கொடுக்கத் துவங்கிய பின் ஓரளவு குறைந்துள்ளது என் றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.வளர்ந்த நாடுகளில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக துவங்கிய பாலியல் கல்வி தற்போது, பல்வேறு வகையில் பதின் பருவ இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன் படுகிறது, எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக பாலினம் குறித்த புரிதலை மேம் படுத்துவதற்கான கல்வி கற்றுக் கொடுக்கப் படுகிறது. கேரியன் லிங்டோ என்ற அமெரிக்க ஆசிரியர், “பெண் என்ற முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு பெண் உள்ளாகிறாள்.

ஆண் என்ற முறையில் அந்த துன்புறுத்தலை செய்பவனாக ஒரு ஆண் உள்ளான். இதில் இருவரும் சமமான மனிதர்கள் என்ற புரிதல் இல்லாததன் விளைவே மேற்படி தவறு களுக்கு காரணமாக அமைந்துள்ளது, என் பதை எனது மாணவர்களுக்கு போதிக்கி றேன்” என்று கூறுகிறார். இது உடனடி பலனைத் தரவில்லை என் றாலும், ஒருசில ஆண்டுகளில் நல்ல பல னைத் தரும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகி றார். மேலும் மது இன்று பெண்கள் மீதான தாக் குதலுக்கு ஒரு காரணமாக இருப்பதையும் கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியுள் ளது, எனக் குறிப்பிடுகிறார். மும்பை பத்திரி கையாளர் மீதான தாக்குதலுக்கும் போதை ஒருகாரணம் எனக் கூறப்படுகிறது. புத்தாண் டுக் கொண்டாட்டத்தில், பண்டிகை நாள்க ளில், குடும்ப விழாக்களில், கோவில் திரு விழாக்களில் என எல்லா பொது நிகழ்வு களிலும், மது பானம் விற்பனை அதிகரித்துள் ளது.

இக் கொண்டாட்டங்களில், பெண்கள் காணாமல் போவதும், வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் இடம் பெறுகிறது. இதில் இளை ஞர்கள் பெரும்பாலும் ஈடுபடுவது, எதிர்கா லத்தை மிகுந்த துயரத்திற்கு கொண்டு செல் லும். எனவே பாலியல் வன்முறைகளையும், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப் பதையும், இணைத்துப் பார்த்து செயல்பட வேண்டியதை அரசுகள் உணர வேண்டும்.பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங்கள், வளர்ந்த நாடுகளில் பதின் பருவ இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுத்தர குடும்பங்கள் மற்றும் பெற்றோர் இருவ ரும் வேலை செய்யும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள், வீடுகளில் பெரும் பாலும் தனி யாக இருப்பதும் ஒருவகையில் வக்கிர மன நிலையை ஏற்படுத்தத் துணை செய்கிறது, என்ற தகவலையும் கணக்கில் கொண்டு செய லாற்ற வேண்டியுள்ளது.

சீனாவின் பள்ளிக ளில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இதன் மூலம் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறு கின்றனர். மேலும் 1972 காலங்களில் அறிமுகப் படுத்தப்பட்ட சில சட்ட நடவடிக்கைகள் 1997 காலங்களில் திருத்தப்பட்டு அமலாகிய நிலையிலும், பாலியல் கல்வி மற்றும் கவுன் சிலிங் காரணமாகவும், பாலியல் வன்கொடு மைகள், எண்ணிக்கை சீனாவில் குறைந்தது, என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் 1970 களுக்குப் பின் தான் பாலியல் கல்வி பள்ளிகளில் அறிமுகம் செய்யப் பட்டதாகவும், அது பாலியல் பலாத்கார நடவடிக்கைகளைக் குறைத்திட உதவி செய்ததாகவும் சொல்கின்றனர். இதே போன்று வேறு சில நாடுகளும் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகைய அனுபவங்களில் இருந்தே, பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங் கள் பள்ளிகளில் தேவைப் படுகிறது. இந்தியா வில், இதுவரை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிவதற்கான முறையில் தான் பாலியல் கல்வி குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2010 ல் மும்பையில் நடந்த ஆய்வு மூலம் 15-29 வயதுக்குற்பட்ட இளைஞர் பிரிவினரிடம் குறிப்பிடத் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டதாக தெரிவிக் கின்றனர். அதாவது இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரில் 31 சதமானோர் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர் என்ற செய்தி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

ஆனாலும் ஆய்வின் அடிப்படையில் மேற் கொண்ட கவுன்சிலிங் (ஆலோசனைகள்) நல்ல பலனைத் தந்துள்ளது என்பது ஆறுத லான செய்தி.. விரிவான முறையில் உளவியல் வளர்ச்சிக்கான வகையில் பாலியல் கல்வி மற்றும் ஆலோசனைக்கான சூழலைப் பதின் பருவ இளைஞர்களுக்கு உருவாக்குவது அவசியம் என்பதையும் ஆய்வு குறிப்பிடுகிறது. அதேபோல் விசாகா வழக்கில் கொடுக்கப் பட்ட வழிகாட்டுதல் படி பாலின சமத்துவத் திற்கான நட்புரீதியிலான செயல்பாட்டை அனைத்து மட்டங்களிலும் அமலாக்குவது குறித்தும், மக்களின் எழுச்சிகள் உருவாகி யுள்ள இன்றைய சூழலில் திட்டமிட வேண் டும்.

இல்லையென்றால் எதிர்பாலின கவர்ச் சியை உருவாக்கும் விளம்பரங்களும், பெண் ஒரு நுகர்வுப் பண்டம் என்ற எண்ணமும் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

 1. வெட்க்கக் கேடானதும் அறிவார்ந்த இனத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொல்ல நா கூசுவதும் தடுக்க முடியவில்லை..

  அருமையான மேலும் மிகவும் அவசியமானக் கருத்தை உள்ளடக்கியக் கட்டுரை.

  ஆணும் பெண்ணும் சமம்… 

  அன்றாடம் இந்தியாவில் பெரும்பாலோர் வணங்கும் கடவுளின் தத்துவமும் அதையே கூறுகிறது. தாய் மொழி, தாய் நாடு, பாரதத் தாய்.. கங்கா, காவேரி, யமுனா என்றெல்லாம் பெண்ணை தெஇவமாகவழ்ங்கும் தார்ப்பரியமும் அது தானே!

  “தையலை உயர்வு செய்” செய்கிறோமா… செய்ய வேண்டும்!

  இன்று மகாகவியின் நினைவு நாள். அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே பேசிய விசயத்தின் சாரம் தாம் இவைகள்… அதற்கு வழியும் கூறிச் சென்று இருக்கிறான் அந்த பாரதி… இன்னமும் நம்மால் சரி செய்ய முடியவில்லை… 

  வெட்க்கக் கேடானதும் அறிவார்ந்த இனத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொல்ல நா கூசுவதும் தடுக்க முடியவில்லை..

  மேடை தோறும் பேசும் தமிழர் களாகிய நாம் நமது வீட்டில், பள்ளிக் கல்லூரிகளில், வேலை இடத்தில் பெண்ணை சமமாக நடத்துகிறோமா என்றால் இல்லை என்றேத் தோன்றுகிறது. இது ஒரு புறம் இருக்க…

  இப்போது வரும் திரைப் படங்கள், சின்னத் திரை காட்சி வசனங்கள் பெண்ணை போகப் பொருளாகவோ அல்லது மிகவும் கொடுமைக்காரியாகவோ தான் காட்டுகிறது…

  எல்லாவற்றிற்கும் மேலாக கோடிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு கொஞ்சம் மட்டும் ஆடை உடுத்தி திரையில் வரும் நடிகைகளும், பெரும்பாலும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் அவர்களின் தாய் மார்களுமே பெண்மையின் உயர்வைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்கள். இவர்களுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். 

  பெண்மை பாது காக்கப் பட வேண்டும் என்றால் பெண்களே விழிப்புணர்வு கொள்ள வேண்டும்… கற்பைப் பற்றிய புராண இதிகாசக் கதைகள் வெறும் கப்சா என்று கூறுவதை நிறுத்தி.. அது வெறும் கற்பனை என்றே கூறிக் கொண்டாலும்… அதன் அவசியத்தை உணர்ந்து தந்து பிள்ளைகளுக்கு அவர்கள் சிறு வயதில் இருந்தே போதிக்க வேண்டும்…

  கற்பு அதையும் “இரண்டு கட்சிக்கும் பொதுவெனக் கொள்ள வேண்டும்”

  பாலியல் விழிப்புணர்வு கல்வி அவசியமே அதை இங்கேயும் (சிங்கப்பூரிலும்) பள்ளிகளில் செய்கிறார்கள் அதில் பெற்றோர்களாகிய எங்களின் பங்கும் இருக்கிறது… 

  அதாவது, வளரும் குழந்தைகளிடம் அவைகளை மிகவும் நாசுக்காக அதை பற்றிய விசயங்களைக் கூற வேண்டும்.. அப்படிப் பேசி பழகினால் எந்த சூழலிலும் அவர்கள் நம்மோடு அதை பற்றிய விசயங்களை, சந்தேகங்களை பகிர்ந்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்…

  பாலியல் கல்வி, அது பாதுகாப்பான உறவையும், பாலியல் உறவில் பெண்களே எத்தனை துயரம் அடைகிறார்கள் என்பதையும் அறிந்துக் கொள்ளவும் முடிகிறது..மாறாக ஒருப் பெண்ணை இப்படி சீரழிப்பது தவறு என்ற உணர்வை ஒரு ஆண்மகனுக்குத் தருமா என்பது சந்தேகமே… 

  பாலியல் வன்கொடுமைகள் எத்தனை கொடூரமானச் செயல் அதை செய்வது எத்தனை தவறானது என்பதை ஒவ்வொரு ஆன் மகனுக்கும் உணர்த்தப் பட வேண்டும்… அதோடு ஆணுக்கு பெண் ஒன்றும் மட்டமில்லை என்ற உணர்வும் குழந்தைப் பருவத்திலே சொல்லித் தரப் பட வேண்டும்… 

  பெண்களை உயர்வுச் செய்ய வேண்டும் அதற்கு நல்ல ஆசிரியர்களை பள்ளியில் அமர்த்த வேண்டும்…

  “ரௌத்திரம் பழகு”

  பாரதி கூறியது போல் ரௌத்திரம் சொல்லித் தர வேண்டும் அதை பெண்களுக்கு ஒரு கட்டாயப் பாட மாக்கி பள்ளிகளில் போதிக்க வேண்டும். பெண்களில் மிகவும் அதி புத்திசாலிகளாக இருப்பவர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு மாவட்டமும் அவர்களுக்கு அவர்களின் அறிவை வளர்த்துக் கொண்டு கல்வியில் தனி முன்றேற்றம் பெற்று இந்த சமூகத்திற்கு தொண்டு செய்ய உயர் பதவியில அமர எதுவாக அரசாங்கமே தனிப் பள்ளிகளை மாவட்டம் தோறும் அமைத்து அதில் அறிவு ஜீவிகளான பெண்களை சேர்த்து புதியதோர் சமுதாயத்திற்கு சக்திகளை படைக்க வேண்டும்.. 

  படித்த ஒழுக்கமுள்ள பெண்ணை கொண்ட குடும்பமே உயர்ந்திருக்கிறது.. அப்படி உயர்ந்த குடும்பங்கள் நிறைந்த சமூகமே உயரவும் முடியும்.. அப்படிப் பற்ற சமூகங்களைக் கொண்ட நாடு தான் உலகில் முன்னணியாகவும் இருக்க முடியும்.. 

  ஒழுக்கத்தையும், வாழ்வியலின் சீரிய முறையையும் நாம் வேறெங்கும் கடன் வாங்க வேண்டாம்.. நம்மிடம் நமது உணர்வில் இரத்தத்தில் அந்த அணுக்களில் நிறையக் குவிந்து இருக்கிறது அதன் மீது இருக்கும் திரையை விலக்கினாலே போதும்..

  தான் ஒரு போகப் பொருள்ள… இந்த புவியைப் படைத்த பராசக்தியின் சாயலில் பிறந்த புனித பிறவி என்னை யாரும் காட்சி பொருளாக்கி காசு சம்பாதிக்கவோ எங்களைக் காயப் படுத்தவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஒவ்வொருப் பெண்ணும் வைராக்கியத்துடன் உறுதி மொழி எடுத்து அதன் படி வாழ் வேண்டும்…

  “எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளை தான் 
  மண்ணில் பிறக்கையிலே அவன் 
  நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் 
  அன்னையின் வளர்ப்பிலே” 

  அருமையான சிந்தனையைத் தூண்டும் பகிர்வு… மிக்க நன்றி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *