வெங்கடேச அட்சரமாலை

சு. கோபாலன்


புனிதமான புரட்டாசி மாதத்தில்,  திருமலை வாசன் திருப்பதி வெங்கடேசனுக்கு

மிக உகந்த முதல் சனிக்கிழமையன்று அவன் திருப்பாதத்தில் ஒரு சிறிய பாமாலை

சமர்ப்பணம்.

 

அதிகாலைப் பொழுது விடியுமுன்பே

ஆதவன் வானில் உதிக்குமுன்பே

இனிய சுப்ரபாத இசையால்

ஈர்க்கப்பட்டு துயில் எழுந்து

உனைக் காண வரும் பக்தருக்கு

ஊக்கமாய் நடுநிசி வரை

என்றும் தரிசனம் தந்திடும்

ஏகாந்தமாய் எழுந்தருளிய எம்பிரானே!

ஐயமின்றி நீ கருணைக் கடலே!

ஒப்பிலாத தெய்வமே மலையப்பா!

ஓடி வருவோம் உன்னருள் நாடி

ஒளடதமாய் கலி தீர்க்கும் உந்தாள் தேடி!

 

படத்துக்கு நன்றி: http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/

 

Share

Comments

One response to “வெங்கடேச அட்சரமாலை”

  1. அகரவரிசையில் அமைக்கப்பட்ட மிக எளிய, அழகிய பாடல் கருத்தைக் கவர்ந்தது. நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *