வடமுல்லைவாயில் பதிகம் 2
பொன்னோ,பொருளோ, பெயரோ, புகழோ- எதிலும் நாட்டமில்லமல், அவளையே நினைந்த தினங்களில்
அவளோடு ஒரு உரையாடல்…
இணைப்பில், சிவகாமசுந்தரி கோட்டோவியம்
பார்க்க, படிக்க, ரசிக்க…
ராகம்: ஆபேரி
பொருள்தேடி வாழாமல் பொழுதெலாம் வாழ்க்கைக்குப்
பொருந்துமோர் பொருள்தேடினேன்
பொன் தேடி அலையாமல், பெயர்,பேறு விழையாமல்
புரியாமல் உனைநாடினேன்!
இருள்மூடும் இகவாழ்வில் எனைஆழ்த்த முடியாமல்
இதமான ஒளிதேடினேன்
இதமான ஒளிகாண முடியாமல் மனமெங்கும்
துயர்சூழ மிக வாடினேன்!
சுருளோடும் சடையோனின் இடபாக வடிவே உன்
சுந்தரப் பாதங்களில்
சுவையான கவிகோடி மலர்தூவ நீமகிழும்
சுகமெனக் கருளுவாயே!
அருள்கூடும் விழிகளாம் ஆனந்த வாரிதியில்
ஐயனை ஆழ்த்தும் அழகே!
வடமுல்லைவாயிலில் படர் முல்லையே எனை
வாழ்விக்க வரும் அன்னையே!
சு.ரவி
கோட்டோவியமும் பாட்டோவியமும்
கேட்டுவாங்கிடும் பாராட்டை..
வாழ்த்துக்கள்…!