பாடம்…

செண்பக ஜெகதீசன்

Rice field in early morning. Takasaki, Japan.

இயற்கையும்

இப்போது கற்றுக்கொண்டது,

இந்த மனிதனைப் பார்த்து..

 

இரவெல்லாம் காத்திருந்து

கையேந்தி

இலைகள் சேகரித்த பனித்துளிகளை,

இந்தக்

கதிரவன் வந்து

கவர்ந்து சென்றுவிட்டானே…!

 

படத்திற்கு நன்றி: http://blog.jasonweddington.com/2012/08/rice-field-sunrise/

Share

Comments

3 responses to “பாடம்…”

  1. தனுசு

    நல்லதொரு கற்பனையில் தந்த பனித்துளி கவிதை அருமை.

    எங்கே குறளின் கதிர்கள்?

  2. சச்சிதானந்தம்

    மிக நுணுக்கமான ஒப்பீடு. வாழ்த்துக்கள்

  3. -செண்பக ஜெகதீசன்…

    திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோரின்
    கருத்துரைகளுக்கு மிக்க நன்றி..
    குறளின் கதிர்கள் விரைவில் வரும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *