துதி கோவிந்தனை!
இலந்தை ராமசாமி அவர்கள் சிறந்த தமிழ்ப் புலவர். அருமையான கவிஞர். அவருடைய “பஜகோவிந்தம்” தமிழாக்கம் படிக்க படிக்க இனிக்கும். அதிலிருந்து நான்கு பத்திகளுக்கு நான் இசை அமைத்துப் பாடியிருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
(கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)
“ துதி கோவிந்தனை!”
(தமிழில் “பஜகோவிந்தம்”)
கவிதை: இலந்தை ராமசாமி
இசையமைத்துப் பாடியவர்: ஆர்.எஸ்.மணி
————————————————————————–
Youtube link:
http://www.youtube.com/watch?v=XnwYVibKkCc
துதி கோவிந்தனை! துதி கோவிந்தனை!
துதி கோவிந்தனை! – அட மூடா!
எதிர்நின்று யமன் அழைத்திடும் போது
இலக்கணக் கல்வி காப்பாற்றாது! (துதி கோவிந்தனை)
மூடனே விடுவாய் பணம் கொள்ளும் தாகம்
மூலம் மனத்தில் உணர்தல் விவேகம்
பாடு பட்டுழைத்து கிடைப்பதை உண்டு
பாங்குடன் வாழ்க நீ நிம்மதி கொண்டு (துதி கோவிந்தனை)
தாமரை இலைமேல் தண்ணீர் திவலை
சஞ்சலம் வாழ்க்கை என்றும் கவலை
சேமக் குறைவு, நோய் நொடி கலகம்
சிந்தை மயக்கம், இதுதான் உலகம்! (துதி கோவிந்தனை)
யார் உன் மனைவி? யார் உன் பிள்ளை?
ஆஹா வாழ்க்கை, விசித்திரக் கொள்ளை!
யார் உன் முன்னோர்? ஊரும் எங்கே?
அறிவாய் தம்பி, உண்மை இங்கே! (துதி கோவிந்தனை)
—————————————————————————————————————
எளிய சந்தம், வலிய பொருள், வளமான கவிதை, வருடும் இசை, வசீகரக் குரல், வாழ்க!
அன்புள்ள அண்ணா கண்ணன்,
உங்களுடைய பாராட்டே ஒரு கவிதையாக விரிகிறது!நன்றி!
அன்புடன்,ஆர்.எஸ்.மணி
அருமை !
மிக்க அருமை. மற்ற பாடல்களையும் கேட்க ஆவலைத் தூண்டுகிறது
நன்றி, பசுபதி!
அன்புள்ள கோபாலன்,உங்கள் பாராட்டுக்கு நன்றி.முடிந்தால் மீதி பாட்டையும் பதிவு செய்ய முயல்கிறேன்.அன்புடன்,ஆர்.எஸ்.மணி