தீனா வேணு

 

உண்டு ,உண்டு !

தெய்வம் உண்டு என்றே கூறிடுவேன் ,

இல்லை ,இல்லை ,

தெய்வம் இல்லை ,என்பது இல்லை என்பேன் ,

உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் ,

காற்றில் தெய்வம் உண்டென்பேன் ,

உயிர் வழ நீர் சுரக்கும் ,கரும் முகிலில் தெய்வம் கண்டேன்

இருள் கிழித்து ஒளி வீசும் கதிரவனை தெய்வம் என்றே

கைகூப்பி

வணங்கிடுவேன் ,

நெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,

பனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,

இயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற

மழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்

தெய்வத்தை,,

பொருள் இல்லா ஏழைகளுக்கு பொருள் தந்து உதவுகின்ற அன்பு

கரங்களில் தெய்வம் கண்டேன்

தனக்கென்று வாழாத பிறருக்காக வாழுகின்ற ,

களங்கம் இல்லாத ,உள்ளம் அதை தெய்வம் வாழுகின்ற

ஆலயம் என்றே ,வணங்கிடுவேன் ,,,

உண்டு, உண்டு ,

தெய்வம் உண்டப்பா …..

 

2 thoughts on “உண்டு !

 1. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கவிதை இது, நன்றி.

  ….. தேமொழி

 2. நெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,

  பனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,

  இயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற

  மழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்

  தெய்வத்தை,,
  அருமை அருமை திரு தேவா அவர்களே! உங்கள் வல்லமையைப் போற்ற இறைவனே வரவேண்டும்.
  அன்புடன்
  ஸம்பத்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க