ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 2

1

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

— அண்ணாமலை சுகுமாரன்

அண்ணாமலை சுகுமாரன்

 

அதிகாரம்  1     =வீட்டுநெறிப் பால்

—————————————
பிறப்பின் நிலை

============================

1 )    ஆதியாய் நின்ற வறிவு  முதலெழுத்

தோதிய நூலின் பயன் .—–

இறைவனைப் பாடும் பாடலொன்று’  ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே ‘  என்கிறது .’ நாதபிந்து ‘என்கிறார் அருணகிரி நாதர்
இந்த உலகம் தோன்றும் முன்பே ஓசை இருந்தது .
இந்த ஒலியில் இருந்துதான் உலகம் படைக்கப்பட்டது என சாஸ்திரங்கள் கூறுகின்றன .ஒலியில் இருந்து உண்டான உலகம் ஒளியினால் பேணப்பட்டு ,பிறகு ஒளியிலேயே ஒடுங்கி விடுகிறது என்பது சித்தர்கள் கண்ட ஞானம் .

‘ ஓம் ‘எனும் நாதத்தில் இருந்துதான் இந்தப்பிரபஞ்சம் தோற்றிவிக்கப்பட்டது என நமது ஞானிகள் கூறுகிறார்கள் .

எந்தொரு  ஓசையை உண்டாக்கவேண்டும் என்றாலும் ,அது மனிதனாக ,இருந்தாலும் ,அல்லது மிருகமாக இருந்தாலும் வாய்தான் ஓசை உண்டாக்கும் கருவி . எந்த ஒரு ஓசையையும் வாயினால் செய்ய வேண்டுமானால் மூன்றுவிதமான இயக்கத்தை வாய் செய்ய வேண்டும் .

வாயைத்திறப்பது                   (ஆக்கல் )

வாயில் ஒலியை காப்பது (அங்காத்தல் )உரை  (காத்தல் )

வாயை மூடுவது .              (அழித்தல் )

இந்த மூம்று செயல்களின் வாயிலாகத்தான் ஓசைகள் ,சொற்கள் ,பொருள் ,உரைகள் ,பலன் சொல்நயம் இத்தனையும் விளைகிறது .

ஓம் எனும் ஓங்கார எழுத்தில் மூன்று எழுத்துக்கள் இணைத்திருப்பதை உணர்கிறோம் .அவை அ ,உ ,ம எனும் மூன்று ஒலிகளாகும் .

‘அ ‘எனும் எழுத்து வாயில் ஒளியைக் காத்தலால் பிறக்கிறது .

‘உ’ எனும் எழுத்து உதடுகளை குவித்து ஒலிப்பதால் பிறக்கிறது .

அதாவது திறத்தலின் போது பிறக்கிறது .

‘ம’ எனும் எழுத்து உதடுகள்  மூடிய நிலையில் ஒலிப்பது .அதாவது உதடுகளை மூடும் போது ஒலிப்பது .இதைக்கொண்டே படைப்பை ,

மூன்று நிலை என்று கொண்டார்கள் ,படைத்தல் .காத்தல் ,.முடிவு எனக் கொண்டார்கள் சித்தர்கள் .

இனி முதல் குறளைப் பார்ப்போம் .

இதன் பதவுரை 1906  ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஔவையார் திருவாய்மலர்ந்த குறள்    மூலமும் உரையும் என்ற நூலில் மா .வடிவேலு முதலியார் தொகுத்த புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு தருகிறேன் .

கருத்துரை ,மற்றும், தெளிவுரையை, யான் பல நூல்களை கண்டும் தெளிந்தும் எனக்கு ஏற்ப்பட்ட பட்டறிவின் துணையுடன் ,சித்தர்களின் ஆசியுடன் தர முயற்ச்சிக்கிறேன் .

இந்த குறளுக்கு உரை எழுதப்புகுந்த போது எளிதில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை ,இருமுறை எழுதியது ஏனோ மறைந்து விட்டது .

பின்னர் அன்னையின் அருகாமையில் வேண்டி அனுமதி பெற்றபின்னே இதைத் தொடர முடிந்தது .

சித்தர்களின் இலக்கியங்கள் அத்தனையுமே ,படிப்பவரின் தன்மையைப் பொறுத்தே அதே தன்னை விரித்துக்காட்டும் ,மேலும் பாவனை மிக முக்கியம் .

இனி பதவுரை

1 )    ஆதியாய் நின்ற வறிவு  முதலெழுத்

தோதிய நூலின் பயன் .–

ஆதியாய் =(இந்த சரீரத்திர்க்கு )முதன்மையாய் ,

நின்ற = இருந்த , அறிவு = அறிவானது ( எனக்கு இதைச்சொல்ல இடம் கொடுத்து ) முதல் எழுத்து =ஆதியட்சரமாகிய (பிரணவத்தை )

ஓதிய =முதலில் உச்சரிக்கின்ற , நூலின் =வேதத்தின்

பயன் =யோசனமாகும் .

உலகில் தோன்றியிருக்கும் மனிதனோ ,விலங்கோ ,அவைகளின் வாயைத்திறந்ததும் வருகின்ற எழுத்து எனன அது ‘அ ‘தானே

அந்த ‘அ ‘தானே உலகின் ஆதியான பிரணவம் எனும் முதலெழுத்தின் முதலெழுத்தாக அமைகிறது .

எனவே ‘ அ ‘என்பதை முதன்மையாகக் கொண்டே அனைத்து நூல்களும் எழுகின்றன .

இங்கு நூல்கள் எனும் போதே எவை  தர்மத்தை மட்டுமே போதிக்கின்றனவோ அவைகளை மட்டுமே நூலாகக் கொள்ளவேண்டும் .

பொழுது போக்கும் ,பயனில பேசும் நூல்கள் ,இங்கே எடுத்துக்காட்டப்பெறவில்லை .

எனவே   முதலெழுத்தோதிய நூலின் பயன் .–யாது என்றால் ,
ஆதியாய் நின்ற வறிவு  யாது என அறிவதே .

அப்போது ஆதியாய் நின்ற அறிவு என்பது எனன  ?
அறுதி உண்மை ,எல்லையற்ற உணர்வு ,எல்லையற்ற அறிவு ,
எல்லையற்ற ஆற்றல் .எல்லையற்ற ஆனந்தம் இவற்றை தன தன்மைகளாகக் கொண்ட எல்லையற்ற அறிவின் இருப்பிடமான
கடவுள் எனும் எல்லையற்ற உணர்வுப்பொருள் நம் அனைவரிடத்திலும்
ஆன்மாவாக ஆதியாக நின்ற அறிவாக அனைவர் உடலிலும் இருக்கிறது .
அதை உணர்வதே அறிவின் பயன் .

இதையே ஔவை உடலுக்கு மட்டுமின்றி இந்த உலகின் ஆதியாக நின்ற அறிவு என்று கொண்டிருப்பாரானால்

உலகின் ஆதியாக அறிவு என்பது ஆதியாக இருந்த ஒளியைப் பற்றி அறிவதே.

ஒலி என்பது எனன ?
அதுவே சூக்ஷும பிரணவமாக உலகில் சூழ்ந்து நிற்கிறது .அதில் இருந்தே இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது .

எனவே உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளும் வாயைத்திறந்த மாத்திரத்தில் வெளிவரும் முதல் சொல்லான’ அ ‘   எனும் எழுத்தை முதலாகக் கொண்டு எழுந்த அனைத்து நூல்களின் பயன் , உலகம் தோன்றுவதற்கு காரணமான ஓம்காரத்தை புரிந்துக் கொள்வதே அதுவே அ ,உ ,ம என ஆக்கள் அழித்தல் காத்தல் எனும் முப்பெரும் சக்தியாகவும் விளங்குகிறது .

நமது உடலில் அதுவே ஆதியாக அமைந்த அறிவின் பொருள் ஆன்மாவாக விளங்குகிறது என்பதுவே .

அண்டத்தில் உள்ளதுதானே பிண்டத்திலும் உள்ளது ?

இதையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
வள்ளுவர் திருக்குறளில் தனது முதல் குறளில்
எனன கூறுகிறார் பாருங்கள் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

( குறள் எண் : 1 )

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால் நமது சித்தர் ஔவ்வைப் பிராட்டியோ ‘ அ ‘எனும் எழுத்தை வெளிப்படையாகக் கூறாமல் , உலகின் ஒசைக்கெல்லாம் முதலெழுத்து என நயம்படக் கூறுகிறார் .

ஆதிபகவன் என்று கூறாமல் ஆதியாக நின்ற அறிவு என்கிறார் .

இதுவே சித்தமரபுக்கு உள்ளத் தனித்தன்மை .

இதைக் கொண்டு ஔவையின் குறள் இயற்றப்பட்டகாலம் அறிய இயலுமா ?

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 2

 1. http://www.youtube.com/watch?v=lBamaHQKrEA

  அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
  ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி
  இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
  ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே

  உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
  ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய், அம்மா பேச வைத்தாய்

  எண்ணும் எழுத்தெனும் கண் திறந்தாய்
  ஏற்றம் தரும் புதுமை ஆற்றல் தந்தாய்
  ஐயந்தெளிய வைத்து அறிவு தந்தாய்
  ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
  ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

  http://www.youtube.com/watch?v=lBamaHQKrEA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *