பொது

ராதிகாவின் முதல் பாராளுமன்ற உரை – தமிழில்!

கனடா பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார் ராதிகா சிற்சபை ஈசன்

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன், கனடா பாராளுமன்றத்தில் தம் கன்னி உரையைத் தமிழில் ஆற்றினார். கனேடிய பாராளுமன்றத்தில் ஒருவர் தமிழில் உரையாற்றியது, இதுவே முதல் முறை. ராதிகா, தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பேசி, மகத்தான தொடக்கத்தை அளித்துள்ளார்.

அவரது உரையின் காணொலிக் காட்சியை இங்கே கண்டு களிக்கலாம்.
http//www.you tube.com watch ?v=K9yqU37MhT4
ராதிகா சிற்சபை ஈசன், மேலும் பல வெற்றிகளைப் பெற, அவரை வல்லமை மின்னிதழ் வாழ்த்துகிறது.

 

===========================================
தகவல் – ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  ராதிகா சித்சபேசன் அவர்களின் தமிழ்ப் பேச்சைக் கேட்டோம்.
  ஒரு தமிழச்சியின் பன்மொழிப் புலமையை அறிந்தோம.
  கனடா நாட்டு என் டி பி கட்சியுடன் களம் இறங்குவது
  பாராட்டுக்கு உரியது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை
  கண்டு கொள்ளாத கட்சிகள் இங்கேயே இருக்கும் போது
  என் டி பி கட்சி கருணை உள்ளத்தோடு பார்ப்பது மனதுக்கு
  மகிழ்ச்சியைத் தருகிறது. ராதிகா வெற்றி பெற மனமுவந்த
  வாழ்த்துக்கள்.
  இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க