தீபத்தின் ஒளி கண்டுbuss
தீமைகள் விலகட்டும்
தித்திக்கும் இன்பங்கள்
திக்கெட்டும் எட்டட்டும்

ஆசைகள் வழி ஓடி
ஆபத்தைத் தேடிடாமல்
அமைதி வழி கண்டு
அகிலம் சிறக்கட்டும்

சீரிய சிந்தனைகள்
சிறப்பாக ஓங்கட்டும்
சிந்தித்து செயலாற்றி
சீலமாய் வாழட்டும்

ஆறுதல் தனைத் தேடி
ஆழகாக இல்லந்தோறும்
ஆனந்தத் தீபங்கள்
அணையாமல் ஒளிரட்டும்

வேதத்தின் வழி தன்னில்
விவேகத்தின் துணையுடன்
வாழும் வகைகள் எல்லாம்
வையத்தில் செழிக்கட்டும்

நேற்றைகளின் அனுபவங்கள்
இன்றைகளின் வழியாக
நாளைகளின் விடிவை நோக்கி
நானிலமே ஒளிரட்டும்

நாளெல்லாம் உழைத்து விட்டு
நலிவொன்றே பரிசாக
நடமாடும் உழைப்பாளர்
நன்மைக்காய் தீபங்கள் ஒளிரட்டும்

அன்பினிய உள்ளங்கள் அனைத்திற்கும்
அன்புடன் கூடிய என் வாழ்த்துக்கள்
அனைத்து வளங்களும் பெற்று வாழ
ஆயிரம் கோடி தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.