வார ராசி பலன் 04.11.13-10.11.13
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.
ரிஷபம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.
மிதுனம்: பணியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை குறித்து, அதன்படி செயலாற்றினால், பணம் ,லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும். இந்த வாரம் தாய் வழி சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.
கடகம்: கலைஞர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள் . ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர் களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.
கன்னி:கலைஞர்கள் பணியாளர்கள் முன் சொந்த விஷ்யங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. வாங்கிய கடன் ஓரளவு அடைவதால், பெண்கள் மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், மாணவர்கள் நேர்மையான வழியிலேயே சென்றால், உங்கள் நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், தீர்வுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்கு வேண்டிய மருந்துகளை தவறாது உண்டு வந்தால், பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
துலாம்: சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சிக்கு இந்த வாரம் அடித்தளமாய் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.தள்ளிப் போடப்பட்டிருந்த காரியங்கள் உடன் முடியும். கலைஞர் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே திறமையோடு புத்திசாலித் தனத்தையும் இணைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் வரும் வழிகள் மேலும் உயரும்.
விருச்சிகம்: இந்த வாரம் வியாபாரிகளின் முன்னேற்றத்தில் இருந்த தேக்க நிலை மாறி பரபரப்புடன் செயல்படுவார்கள்.உறவுகளின் மீது பெண்கள் வீண் சந்தேகங்களை வளர்த்துக் கொண்டு அவதிப் பட வேண்டாம். கலைஞர்கள் வேண்டிய உழைப்பை நல்கினால், இது வரை எட்டாக் கனியாய் இருந்தவாய்ப்புக்கள் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். உபத்திரவம் தந்தவர்கள், விலகி விடுவதால் பொது வாழ்வில் இருப்பவர்களின் செயலாற்றல் மேலும் சிறப்பாக இருக்கும். பணி புரியும் இடங்களில் வீண் பகை வளராதிருக்க, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுங்கள்.
தனுசு: பெண்கள் இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை, மன உளைச்சல் இரண்டும் ஏற்படாது. எதிரிகள் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உண்டு.கூட்டாக செயல்படும் போது மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். முதியோர்களுக்கு பல் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். எனவே குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
மகரம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்.
கும்பம்: பெண்கள் பதற்றத்திற்கு இடம் தராமல், பணிவான முறையில் உரையாடினால், குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் தீய சகவாசம், வேளை தவறிய உணவு, வீண் செலவு, ஆகிய அனைத்தையும் தவிர்த்து சீரான வழியில் சென்றால், சிக்கல்கள் ஏதும் உருவாகாது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பெயரும்,நல்ல மதிப்பெண்ணும் கட்டாயம் கிடைக்கும்.வியாபாரிகள் மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து விட்டு அல்லல் படாதீர்கள். தன் கையே தனக்கு உதவி என்று பணி புரிந்தால், பணிகளும், வர வேண்டிய பண வரவும் தேங்காது.
மீனம்: இது நாள் வரை உங்களோடு இருந்த பிள்ளைகள் படிப்பு, பணி போன்றவற்றிற்காக, வேறிடம் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள். நீண்ட நாள் நட்பில் இருந்த விரிசல் விலகுவதால் உங்கள் நட்பு வட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலரும். இந்த வாரம் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, மாணவர்கள் விழிப்புடனிருப்பது அவசியம். கலைஞர்கள் மற்றவர்களுடன் பழகும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பியவளமான வாழ்க்கை உங்கள் வசமாகும்.