வார ராசி பலன் 11.11.13-17.11.13
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, வெளியூர், வெளிநாட்டிலிருந்து இனிமையான செய்திகள் வந்து சேரும். பெண்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் முயற்சிகளை மேற்கொள்வார்கள். மாணவர்களின் தோற்றத்தில் பொலிவும் முகத்தில் வசீகரமும் ஏற்படும். அரசு வழியில் சிலருக்கு பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு . சக கலைஞர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியில் இருப்பவர்கள் மன அமைதி பெற யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்யவும். பொது வாழ்வில் பதற்றப்படாமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு முடிக்கவும். .
ரிஷபம்: மாணவர்களின் மனதில் இருந்த தளர்ச்சியும்,தாழ்வு மனப்பான்மையும் நீங்கி புதிய தெளிவு பிறக்கும். சுயதொழில் புரிபவர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வருமானம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் .உற்றார், உறவினர்கள் உங்கள் இல்லம்தேடி வருவார்கள். சந்தோஷம் இருந்தாலு,ம், பெண்களின் வேலைப்பளுவும் அதிகரிக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் பொது வாழ்வில் உள்ளவர்கள் , தங்கள் கடமைகளை முடிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். மாணவர்கள் தங்களின் திறமையான பேச்சினால் மற்றவர்களைக் கவர்வார்கள்.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் வழிகாட்டுதலால், பெண்கள் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண்பர். பணியில் இருப்பவர்களின் அமைதியை தேவையற்ற இடமாற்றம் கெடுக்கலாம். மாணவர்கள் தங்களின் நட்பு கெடாமலிருக்க, நண்பர்க ளுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருங்கள். ஏற்ற இறக்கமான பொருளாதாரம் இருந்தாலும் கடும் முயற்சியால் வியாபாரிகள் நிலைமையை சமாளித்து விடுவர். சுய தொழில் புரிபவர்கள் முக்கியமான வேலையில் உங்கள் முழு கவனம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம். கலைஞர்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவான கால நேரம் வரும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது.
கடகம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்கள் நம்பிக்கைக்கு மேல் மற்றவரின் சந்தே கப் பார்வை விழாமல் பார்த்துக் கொண்டால், எந்தப் பணியும் சுமையாய் தோன் றாது.வியாபாரிகள் பண இருப்புக்கேற்றவாறு சரக்குகளை வாங்கிக் கொள்ளுதல் அவசியம். மாணவர்கள் குறுக்கு வழிகளில் சிந்தனையை அலைய விடாதிருந்தால், நாடி வரும் நன்மைகளை தக்க வைத்துக் கொள்ள இயலும். பெண்கள் உடல் நலத்தை நன்றாக பராமரித்தால், உற்சாகம் குறையாமல் பணிகளில் ஈடுபடமுடியும். மற்றவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருப்பது அவசியம்.
சிம்மம்: மாணவர்கள் உடனிருந்து தொல்லை தருபவர்களிடம், எச்சரிக்கையாய் நடந் துகொண்டால், எந்தத் தொந்தரவும் புதிதாய் முளைக்காமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வந்தால், அனைத்தும் சீராகவே நடக்கும். நினைவாற்றல் பெருகுவதால், மாணவர்களுக்கு தங்கள் வேலைகளை முடிப்பது சுலபமாக இருக்கும். பெண்கள் தேவையில்லாமல் அக்கம்பக்கம் பக்கத்தாரின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் தீயவ ரை ஒதுக்கினால்,வளமான வாழ்க்கை அமையும். சக பணியாளர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பை பெற இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்.
கன்னி: முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாக செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும். கல்வித் தொடர்பாக மேற்கொள் ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமைவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் பாடங்க ளைப் பயில்வார்கள். வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்கள் வாகனம் தொடர்பான ஆவணங்களை கையிலேயே வைத்திருந்தால்,வீண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அவ்வப்போது தோன்றும் சிறிய நெருக்கடிகளை தெளிவுடனும், திறமையுடனும் கையாள்வீர்கள். இந்த வாரம் சொத்து பிரச்னைகளை சற்று ஆறப் போடுங்கள். உங்களுக்கு சாதகமான நிலை மலரும்.
துலாம்: வேலை செய்யும் இடத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள். வியாபாரிகள் வேலையாட்களை அரவணைத்துச் சென்றால், எடுத்துக் கொண்ட பணிகள் முழுமையாக நிறைவடையும். தொழில் ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும், கலைஞர்கள் தங்கள் உழைப்பால் வெற்றிப் பெற்று தங்கள் பெயரைத் தக்க வைத்துக் கொள்வர். மாணவர்கள் புதிய இடங்களில், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாய் பழகவும். பெண்க ளின் விடா முயற்சியாலும், பொறுமையாலும், உறவுகளிடையே இருந்த பிணக்கும், சண்டையும் விலகி சமரசம் மலரும்.
விருச்சிகம்: பெண்கள் , பொருளாதார ரீதியாக, வாக்குறுதிகளை அளக்கும் முன் யோசனை செய்வது நல்லது. ஒவ்வாமை தோன்றும் வாய்ப்பிருப்பதால், வயதானவர்கள் உணவு மற்றும் மருந்து விஷயங்களில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அலுவலக த்தில் எவ்வளவுதான் பாடுபட்டாலும், சில நேரம் உங்களுக்கு வரும் நல்ல பெயரை மற்றவர் தட்டிக் கொண்டு போவார்.வியாபாரிகள் இந்த வாரம் புதிய செலவுகளையும், முதலீடுகளையும் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. கலைஞர்கள் வங்கிக்கான கடன் தொகைகளை குறித்த கெடுவுக்குள் செலுத்திவிட்டால், அபராதம் அபராதம் கட்டுதல், வீண் மன உளைச்சல் ஆகிய இரண்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
தனுசு: இந்த வாரம் உறவுகளால் ஏற்படும் சிக்கல்களை பெண்கள் சாமர்த்தியமாக கையாள வேண்டிய சூழல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய வழக்கு விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு உள்ளதால், அமைதியாய் உங்கள் பணியில் கவனம் செலுத்தி வருவது புத்திசாலித்தனம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், அதற்கேற்ற வரவுகளும் தாராளமாக இருக்கும். வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கண்களைப் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தி வாருங்கள். தேர்வு நேரங்களில் படிப்பதில் எந்த சுணக்கமும் ஏற்படாது.
மகரம்: உங்கள் செல்லப் பிராணிகளால் அக்கம்பக்கத்தாருக்கு சில தொல்லைகள் உண்டாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உழைப்புக்குத் தரும் முக்கியத் துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். மாணவர்கள் பதற்றம், மறதி-இரண்டையும் தவிர்த்து விட்டால், படிப்புல் உங்கள் மனதை ஒருமுகப்ப டுத்தி வெற்றி பெற முடியும். பெண்கள் இல்லத்தில் தோன்றும் சிறிய உரசல்களை பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்து கொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! கலைஞர்கள் தராமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் உங்கள் அக்கறை அவசியம்.
கும்பம்: பெண்கள் உறவுகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது பல பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். வியாபாரிகள் பணப் பரிமாற்றம், ஒப்பந் தங்கள் ஆகிவற்றில் எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். தனியார் துறையில் பணி புரிபவர்கள் நல்ல பெயரைப் பெறுவதற்கு கூடுதல் கவனமும், கூடுதல் உழைப்பும் தேவை. பிள்ளைகளின் விஷயத்தில் அதிகாரத்தை விட அன்பான வழிகாட்டல் அவர்களை நல்வழிப்படுத்த உதவும். பங்குகளை வாங்கி விற்பவர்கள் அதிக ஆசைப்பட்டால், பங்குச் சந்தையில் அதிக பணம் முடங்கி விடும். பயணங்களில் அறிமுகம் இல்லாதவரிடம் உங்கள் சொந்த விஷயங்களைப் பரிமாற வேண்டாம் .
மீனம்: .மாணவர்கள் எந்த சூழலிலும், கோபமான வார்த்தைகளை பயன்படுத்துவ தில்லை என்பதில் உறுதியாக இருந்தால், அடுத்தவரின் சகாயம் குறையாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்கள் விருப்பு, வெறுப்புக்களை தேவையற்ற இடங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து விடவும். விடாமுயற்சி மூலமே விரும்பி யதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளும் கலைஞர்களுக்கு வெற்றியோடு, வாய்ப்பு களும் பல வந்து சேரும். இந்த வாரம் பெண்கள் முழங்கால் வலி, பல் உபாதை களுக்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். எனவே அதிக அலைச்சல், குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்- இரண்டையும் குறைத்துக் கொள்ளுங்கள்.