என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

கண்கள் விளம்பிய இரகசியம் – உன்
காதணி ஆடிய இரகசியம்
முறுவல் உதிர்த்த இரகசியம் – பின்
முணுமுணுத்த இதழ் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

கால்கள் சிணுங்கிய இரகசியம் மென்
காலடி ஓசை இரகசியம்
மூச்சும் பேச்சும் இரகசியம் – வெண்
முத்து பற்கள் இரகசியம்
கருமை எழுதிய இரகசியம் – இமைக்
கற்றை வளைவதும் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
அன்பாய் குழைவதும் இரகசியம் – உன்
அரவணைப் பெல்லாம் இரகசியம்
அடம்பிடி வாதமும் இரகசியம் – பின்
அடிமைப் படுத்திடும் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்றும் புரியா இரகசியம் !

  1. சிறப்பாக எழுதப்பட்டுள்ளது, அடுத்து இசையும் அமைத்துக் கொடுத்துவிடுங்களேன் கவிஞரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *