இலக்கியம்கவிதைகள்

சீரடி தரிசனம் கேட்டேன்

 

சீரடி தரிசனம் கேட்டேன் சாயி

நேரடி தரிசனம் தந்தீரே

ஓரடி வைத்து வந்தேன் சாயி

நூறடி முன்னால் நின்றீரே ()

 

வாடிய பக்தனை கண்டதும் சாயி

வாயென் பக்கம் என்றீரே

நாடியக் காரணம் சொல்லும் முன்னாலே

சேயெனக் கெல்லாம் தந்தீரே

பாடியப் பாடலை கேட்டதும் சாயி

பக்தனைப் பார்த்து சிரித்தீரே

தேடிய தெய்வம் நீயென்றாகி

தெளிவுடன் மனதில் அமர்ந்தீரே ()

 

 

பசியென வேளையில் அழுதிடும் போது

பாலாய் தேனைப் பகிர்ந்தீரே

வலியென நானும் வாடதிருந்திட‌

மருந்தாய் அமுதம் பொழிந்தீரே

கலியினில் வஞ்சகம் கவ்வாதிருக்க‌

காப்பாய் கவசம் ஆனீரே

புவியினில் குருவாய் தினமும் எனக்கு

புதுபுது ஞானம் அளித்தீரே ()

 

பெற்றோர்  சேவை பெருஞ்சேவையென‌

பெரு உபதேசம் செய்தீரே

கற்றோர்  சபையில் கலந்திட எனக்கொரு

பேரும்புகழும் கொடுத்தீரே

உற்றோர் உறவினர் விலகியப் போதிலும்

உறவாய் உறுதி அளித்தீரே

மற்றோர்  பிறவிகள் எடுத்தாலுமெனை

சீடனிவனென அருள்வீரே ()

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    ஒரடி வைத்தால் ஆயிரம் அடி வைத்து சீரடி சாய்பாபா வருவார் .. சத்தியமணிக்கு மிக்க நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க