முதல் திருமுறையில் தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் பண்ணிசை
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
முதல் திருமுறையில் திருஞானசம்பந்தர் பாடிக் கிடைப்பவை 136 பதிகங்கள், 1469 பாடல்கள்,
பதிகம் ஐந்தில் ஒரு பாடல் அதாவது இரண்டாம் பாடல் என்பது பதிகம் 005ல் (2)(3)என்று எழுதப்பட்டுள்ளது. கிடைக்காத பாடல்களின் பட்டியல் :
பதிகம் 005ல் (1)( 2), பதிகம் 006ல் (1)( 7), பதிகம் 009ல் (1)( 7), பதிகம் 018ல் (1)(8).
பதிகம் 053ல் (1)( 7), பதிகம் 055 (1)( 7), பதிகம் 066ல் (1)( 7), பதிகம் 068ல் (1)( 7),
பதிகம் 081ல் (4) (4, 5, 6, 7), பதிகம் 089 (1)( 6), பதிகம் 102 (1)( 7), பதிகம் 103ல் (1)(7).
பதிகம் 105ல் (1) (8), பதிகம் 106 (2) (6, 7), பதிகம் 113 (1)(7), பதிகம் 114 (1) (7),பதிகம் 116 (1) (7), பதிகம் 133 (1) (7), ஆகிய 18 பதிகங்களில் 22 பாடல்கள் கிடைக்கவில்லை. எமக்குக் கிடைத்திருக்க வேண்டியன 1469+22=1491 பாடல்கள்.
128ஆவது பதிகத்தில் ஒரு பாடல் மட்டுமே = 1. 45, 63, 90, 117, 127 ஆகிய ஐந்து பதிகங்களிலும் ஒரு பதிகத்துக்கு 12 பாடல்கள் = 60 எஞ்சிய 130 பதிகங்களிலும் ஒரு பதிகத்துக்கு 11 பாடல்கள் = 1430 – 22 = 1408
1 + 60 + 1408 = 1469
ஆக 1469 பாடல்களின் குரலிசையை, ஓதுவார் தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் பண்ணிசையை மின்னம்பலத்தில் www.thevaaram.org கட்டணமின்றிக் கேட்டு மகிழலாம்.

கேட்டு மகிழ்ந்தது மட்டுமல்ல. மன நிம்மதியும் அடைந்தேன். நன்றி, ஐயா.