தேசிய விருது பெறுகிறாய்.. தங்க மீன்களுக்காக..

 

கவிஞர் காவிரி மைந்தன்

kaviri

எழுத்தை நீ சுவாசிக்கிறாய்… தமிழை நீ நேசிக்கிறாய்..kavir

எனவேதான் எப்போதும் தமிழன்னை உன்னை மெச்சுகிறாள்!

தமிழ்ப்பால் அருந்திடும் வாய்ப்பினை தவறாமல் தருகின்றாய்!

தாய்ப்பாலுக்கு நிகராக தமிழினைக் கருதுகிறாய்!!

இசையின் மடியில் தலை வைக்கும் இனிய நல்ல பல்லவிகள்!

இமைபோல் கண்ணைத்தான் காக்கும் சுகம் சுகமான சரணங்கள்!

பழகும் தமிழும் உன் பக்கம் வந்து பாக்கள் எழுதும் அழகைப் பார்க்கும்!

பௌர்ணமி நிலவும் அங்கிருந்து பார்க்கும் இனிய தருணங்கள்!!

அசையும் இசைதான் உன் பாதை.. அதில் நீ நடப்பது அழகுதான்!

இசையும் வசப்படும் உன்னிடம் நீ எழுதிக் குவிக்கும் கவிதைதான்!

உயரம் அதிகம் உள்ளவனே.. உன் உள்ளமும் அப்படி உயரம்தான்!

விருதுகள் உன்னிடம் சரண்புகும்.. அவற்றுக்கும் உன்னைப் பிடிக்குமே!

வாழ்த்துகள்…

காவிரிமைந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.