என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

3

அன்பு நண்பர்களே,

நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

kana1நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். என் பார்வையில் கண்ணதாசன் என்ற பொதுத் தலைப்பில் அவற்றைத் தெளிவான கட்டுரையாக நம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பரிசுகளையும் வெல்லுங்கள்.

கண்ணதாசன் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் அவர்கள், இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:

வல்லமை இதழ் நடத்தும், கவியரசு கண்ணதாசன் கட்டுரைப் போட்டி
இணைந்து வழங்குபவர்கள்: கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரிமைந்தன் மற்றும் கிரி ஐங்கரன்

தலைப்பு – “என் பார்வையில் கண்ணதாசன்”

கட்டுரைகள் பெறப்படவிருக்கும் காலம் – 16.05.2014 முதல் 15.06.2014 வரை..M.-RAVI-KAVIRI

வல்லமைக்குப் புதியவர்கள் உள்பட, எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

கட்டுரை 1000 வார்த்தைகளுக்குள் அமைய வேண்டும்.

கட்டுரைகள் – முழுக்க முழுக்கப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாக, இதுவரை வேறெந்தத் தளத்திலோ. அச்சிதழிலோ வெளியிடப்படாத படைப்பாக அமைதல் வேண்டும்

நடுவர் பொறுப்பேற்று கட்டுரைகளை நமக்காகத் தேர்வு செய்யும் பொறுப்பினை முனைவர் வ.வே.சுப்பிரமணியன் (கவிஞர் வ.வே.சு.) அவர்கள் ஏற்றிருக்கிறார்.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

பரிசுத் தொகை குறித்த விவரம்:

முதல் மூன்று பரிசுகள் தலா ரூ.1000 வீதம்

இரண்டாம் பரிசு ரூ.750

மூன்றாம் பரிசு ரூ.500

10247260_435875026549812_5280102860535261571_nபரிசு பெறுபவர், இந்தியாவுக்கு வெளியில் இருந்தால், அவரது இந்திய முகவரிக்குப் பரிசுத் தொகை அனுப்பப்படும்.

போட்டிக்கு வரும் கட்டுரைகளிலிருந்து நடுவர் மற்றும் வல்லமை ஆசிரியர் குழு பரிந்துரைக்கும் கட்டுரைகள், புத்தகமாக வெளியிடப்படும்.

உங்கள் கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ச் சமூகத்தின் மீது அழுத்தமான தாக்கம் செலுத்தி வரும் கண்ணதாசனைக் கொண்டாட, இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் அனைவரும் பங்கேற்றிட அன்போடு அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

  1. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வல்லமைக்கு வாழ்த்துக்கள்!  புதிது புதிதாகப் போட்டிகளை அறிவித்து எங்களை எழுத் ஆக்கமும் ஊக்கமும் தரும் வல்லமைக்கு எங்கள் நன்றி!

  2. அய்யா, கட்டுரைப் போட்டிக்கு கால நீட்டிப்பு ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?

  3. என் பார்வையில் கண்ணதாசன்…..தலைப்பே கவித்துவமாக உள்ளது. நானும் இப்போட்டிக்கு கட்டுரை அனுப்பியுள்ளேன்.(கிருஷ்ணசாமி என்ற பெயரில்). கவியரசரின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.