கே.ரவி

1980-களில் இசைக்கவி ரமணன் எழுதிப் பாடி எங்கள் குழுவில் மிகப் பிரபலமான பாடல். பல்லவியில் ஹூங்காரமாக ஒரு ஹம்மிங்! அதற்கே வசப்பட்டு ஒரு போதையில் நாங்கள் எல்லாரும் அதையே ஹம் செய்து கொண்டிருப்போம். இந்தப் பாட்டும் என் இசையமைப்பில் (மெட்டு அப்படியே ரமணன் போட்டது. பின்னணி இசை மட்டும் எனது) அமரத்வனி இசைப்பேழையில் ராஜுவின் குரலில் பதிவானது. (அமரத்வனி பேழை 1987 ஆகஸ்ட் மாதம் ம்யூஸிக் அகடமியில் திருமதி ஹேமமாலினி முன்னிலையில் திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.)

======================================

இசைக்கவி ரமணன் எழுதிய பாடலை, கே.ரவியின் பின்னணி இசையில், ராஜகோபால் குரலில் இங்கே கேளுங்கள்:

https://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam_new3.mp3

======================================

இசைக்கவி ரமணன் எழுதிய இதே பாடலை அவர் மகன் ஆனந்த் பாடுகிறார். அதனை இங்கே கேளுங்கள்:

https://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam-Ananda.mp3

======================================

என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம் – ம்ம்ம்ம்
என்நேரமும் உன்நாமமே சங்கீர்த்தனம்images
அந்தநாள் பாலைவனம் – உன்
அன்பிலே ப்ருந்தாவனம் – என்
அன்னை உன்னில் கனவும் நினைவும் துயிலும்
(என்மனம்)
பனித்த கண்கள் குவிந்த கைகள்
பாதிக் கண்கள் திறந்த பண்கள்
தனித்த வனத்தில் தாயைத் தேடும்
மானைப் போல மருளும் நெஞ்சம்
இனியும் பாதை தேடுவேனோ
இமையை மறந்தும் மூடுவேனோ
மலரைத் தேடிப் புலர்ந்த வானம்
சரணம் சரணம் ராகவேந்த்ரம்

நினைத்ததில்லை நெகிழ்ந்ததில்லை
நீண்ட பாதை நடந்ததில்லை
கனத்த நெஞ்சம் உனது பாதம்
கனவில் கூடத் தொழுததில்லை
கங்கையோடு பொங்கும் போது
கண்கள் அழுத சுவடும் ஏது
நான்விழுந்த கரையின் ஓரம்
நாணலாகும் ராகவேந்த்ரம்
(என்மனம்)

(ரமணன்)

 

கே.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “மந்த்ராலயம்

  1. சபாஷ் ஆனந்த். நன்றாகப் பாடியுள்ளாய். நன்றி.வாழ்த்துகள். பின்னணி இசையோடு இந்தப் பாடலை இன்னும் சில நாட்களில் இதே தளத்தில் கேட்கலாம். கே.ரவி

  2. அன்பினிய திரு ஆனந்த்,

    அருமையான குரல் வளம் தங்களுக்கும். பாராட்டுகள். இசையுலகில் மேலும் பல சாதனைகள் புரிய மனமார்ந்த வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவளா

  3. கே.ரவியின் பின்னணி இசையுடன் ராஜகோபால் குரலில் இந்தப் பாடலை இணைத்துள்ளோம். இரட்டை விருந்து, கேட்டு மகிழுங்கள்.

  4. பழைய கேசட்டும் டேப் ரெக்கார்டரும் இல்லாத நிலையில் இந்தப் பாடலை இங்கே கேட்க நேர்ந்ததை ஒரு வரப்ரசாதமாகக் கருதுகிறேன். அமரத்வனியின் முதல் பகுதியில் அனைத்துப் பாடல்களுமே அருமை. அதன் இரண்டாவது பகுதிக்கான அந்தக் காலத்தில் மிகவும் ஏங்கினேன்.. இன்றுவரை கிடைக்கவில்லை. கே.ரவி அவர்களின் இசை அற்புதம். பாடிய ராஜு அவர்களுக்கு இனிமையான குரல். இங்கு பதிவிட்டமைக்கு நன்றி. மகிழ்ச்சி. – கி.பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *