தொப்புள் கொடி அடம்பன் கொடியாகுமோ?
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
வாழலாம்
சாதி, மத, பேதம் மறந்து
மனிதநேயம்!
ஒவ்வொரு தொப்புள் கொடிகளும்
அடம்பன் கொடியாகுமோ?
நீளும் வேரின்
தொடர்பை ஒட்டி!
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடைவெளி
தொட்டுப் பார்க்க முடியாத தூரமாய்த்
தொடர…
வாழும்
மனிதர்களுக்கிடையே மட்டும்
நீளும்
வெறித்தனமான செயற்பாடுகள்…!