ஜோதிடர் சகாதேவன்

vaniyal-300x225

 மேஷம் :

 (அஸ்வினி, பரனி கார்த்திகை முதல் பாதம் முடிய)

தேவையற்ற மன கவலை தவிர்க்கவும். தடைகள் விலகி பண வரவு உண்டு.கடன் தொல்லை தீரும்.

பெண்கள் : குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்

பணியாளர்கள் : பதட்டத்தை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தவும்

விவசாயிகள் : சோர்வை விலக்கவும்

தொழில் முனைவோர் : அந்நியரிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாதீர்கள்

கலைத் துறையினர் : சாதகமான செய்தி உண்டு

அரசியல் துறையினர் : பதவி கிடைக்கும்.

ரிஷபம் :

(கார்த்திகை 2 பாதம், ரோகிணி, மிருகசிரிஷம் 2 பாதம் முடிய)

மற்றவர்களின் ஆதரவு போதுமான அளவு இல்லை என்றாலும் நீங்கள் நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர். வருமானம் வளரும் பயணம் இனிக்கும்.

பெண்கள் : வீண் குழப்பம் வேண்டாமே!

பணியாளர்கள் : இடைஞ்சல்களை அகற்றி வெற்றியை பெறுவீர்.

விவசாயிகள் : வருவாய் உண்டு.

தொழில் முனைவோர் : புதிய முயற்சிகளில் கவனமாக இருக்கவும்.

கலைத் துறையினர் : கடமையை செய்யுங்கள், பாராட்டு தன்னால் கிடைக்கும்.

அரசியல் துறையினர்: உண்மையான மக்கள் சேவையை செய்யுங்கள் பிரச்சனைகள் அகலும்.

மிதுனம் :

(மிருகசிரிஷம் 3 பாதம்  முதல் புணர்பூசம் 3 பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். வரவும் செலவும் சரியாக இருக்கும். பிரயாணத்தில் பயன் உண்டு.

பெண்கள் : மன ஒருமுகப்பாடு தேவை. தியானம் செய்யுங்கள்.

பணியாளர்கள் : திட்டமிட்டு உழைத்தால் பயன் உண்டு.

விவசாயிகள் : கவலைப்படாதீர்கள் நன்மை விளையும்.

தொழில் முனைவோர் : உற்றார் உறவினர் பணப் பரிமாற்றத்தில் கவனம் தேவை.

கலைத் துறையினர் : நீண்ட நாளாய் தள்ளி வந்த திட்டங்கள் நிறைவேறும்

அரசியல் துறையினர் : வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவீர்

 

கடகம் :

( புணர்பூசம் 4 பாதம் முதல், பூசம் ஆயில்யம் முடிய)

உறவினர் ஆதரவு கிட்டும். பணவரவு உண்டு. பிரச்சனைகள் விலகி சமூகம் உங்களை மதிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்.

பெண்கள் ; மகிழ்ச்சி பிறக்கும்

பணியாளர்கள் : ஊதியம் கூடும்

விவசாயிகள் : லாபம் கிடைக்கும்

தொழில் முனைவோர் : அரசு மூலம் ஆதாயம் உண்டு

கலைத் துறையினர் : முன்னேற்றம்

அரசியல் துறையினர்: முயற்சிக்கேற்ற வெற்றி

சிம்மம்:

(மகம் பூரம் உத்திரம் முதல் பாதம் முடிய)

வரவு சிறப்பாக இருப்பதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே!. நினைத்ததை செய்வீர். சேமித்து பழகவும்.

பெண்கள் ; பணவரவு உண்டு

பணியாளர்கள் : பாராட்டு கிடைக்கும்

விவசாயிகள் : லாபம் அதிகரிக்கும்

தொழில் முனைவோர் : லாபமான வியாபாரம்

கலைத் துறையினர் : ஆடம்பரம் வருமானம்

அரசியல் துறையினர்: பதவி பாராட்டு

கன்னி :

(உத்திரம் 2 பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2 ஆம் பாதம் முடிய)

உங்களின் சின்ன சின்ன முயற்சிகள் கூட நல்ல பலனைத் தரக் கூடிய காலம் இது. எனவே தளர்ச்சி அடையாமல் இருங்கள். மகிழ்ச்சி கிட்டும்.

பெண்கள் : விட்டுக் கொடுத்து போவதே சிறப்பான வாழ்க்கை

பணியாளர்கள் : அனுகூலமான வாரம்

விவசாயிகள் : சிறுசிறு தடங்கள் விலகி சீர்படும்

தொழில் முனைவோர் : திருப்திகரமான வாரம்

கலைத் துறையினர் : தடைகள் தாண்டி வெற்றி

அரசியல் துறையினர்: எளிதாக சிறப்பான பணி செய்வீர்

துலாம் :

( சித்திரை 3 பாதம் முதல் சுவாதி, விசாகம் 3 ஆம் பாதம் முடிய)

கையில் பணம் புரண்டால் எப்போதும் உற்சாகம் தானே. சரியாக திட்டமிட்ட எந்த செயலும் காலம் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக பலனை நல்கும்.

பெண்கள் : தேவையற்ற பேச்சைக் குறைக்கலாமே.

பணியாளர்கள் : சாணக்கியத்தனம் கை கொடுக்கும்

விவசாயிகள் : நிறைவான லாபம்

தொழில் முனைவோர் : நிதானம்

கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு

அரசியல் துறையினர்: திட்டம் நிறைவேறும்

விருச்சிகம் :

( விசாகம் 4 பாதம் முதல் அனுஷம் கேட்டை முடிய)

புத்துணர்ச்சி மேலிட வலம் வருவீர்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு வளரும். உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாதீர். பணப்பரிமாற்றத்தில் கவனம் தேவை

பெண்கள் : புதிய ஆபரணம் சேரும்

பணியாளர்கள் :  பணியில் கவனம் வேண்டும்

விவசாயிகள் : புதிய முயற்சி செய்யலாம்

தொழில் முனைவோர் : எச்சரிக்கை வேண்டும்

கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு புதிய சாதனை

அரசியல் துறையினர் : மேலிட பாராட்டு, பதவி

தனுசு :

( மூலம் பூராடம் உத்திராடம் முதல் பாதம் முடிய)

மகிழ்ச்சி பொங்கும். வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பு உண்டாகும்

பெண்கள் : குடும்பப் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கும் மனோபாவம் தேவை

பணியாளர்கள் : முன்னேற்றம் உண்டு

விவசாயிகள் : லாபம் உண்டு

தொழில் முனைவோர் : சுமாரான வாரம்

கலைத் துறையினர் : வெற்றி, பாராட்டு, புதிய வாய்ப்பு

அரசியல் துறையினர்: நிதானம், கவனம்

மகரம் :

( உத்திராடம் 2ஆம் பாதம் முதல் திருவோணம் அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய )

சாதகமான வாரம். உங்களுக்கு விருப்பமான செலவுகளை செய்வீர். உங்களுடைய தளர்ர்ச்சி நீங்கி கலகலப்பாய் இருப்பீர். உற்றார் உறவினர் உதவுவர்.

பெண்கள் : குடும்ப ஒற்றுமை

பணியாளர்கள் : மேலதிகாரிகள் பாராட்டு

விவசாயிகள் : கவனமாக செயல்படவும்

தொழில் முனைவோர் : சாதகமான வாரம்

கலைத் துறையினர் : பாராட்டு கிடைக்கும்

அரசியல் துறையினர் : உங்கள் பேச்சு அனைவரையும் கவரும்

கும்பம் :

( கும்பம் 3ஆம் பாதம் முதல் சதயம் பூரட்டாதி 3 ஆம் பாதம் முடிய )

தளர்வடையாதீர்கள். வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. மனம் தளராமல் இருப்பீர் பண வரவு நன்றாக இருக்கும்

பெண்கள் : பிரச்சனைகள் குறையும்

பணியாளர்கள் : ஊதியம் கூடும்

விவசாயிகள் : விளைச்சல்  அதிகரிக்கும்

தொழில் முனைவோர் : அந்நியரிடம் எச்சரிக்கை

கலைத் துறையினர் : தடைகள் தாண்டிய வெற்றி

அரசியல் துறையினர் : சாதுரியமே சமர்த்து

மீனம் :

(பூரட்டாதி 4 ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி ரேவதி முடிய)

உணர்ச்சி வசப்படாமல் செயல்பட்டால் எல்லா நன்மைகளும் கூடி வரும். மனசு லேசாகும். ஆரோக்கியம் பலப்படும். அனைவரும் உதவிக்கரம் நீட்டுவர். பிரச்சனைகள் தீரும்

பெண்கள் : குடும்பத்தில் ஒற்றுமை.

பணியாளர்கள் : வேலையில் கவனம் தேவை

விவசாயிகள் :  நல்ல லாபம் உண்டு

தொழில் முனைவோர் : பண பரிமாற்றம் சுமூகமாய் உண்டு.

கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு மற்றும் பாராட்டு உண்டு.

அரசியல் துறையினர்: தலைவர் பாராட்டு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *