கிரேசி மோகன்

 

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

———————————————————————————————-
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————–
”கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————-blogger-image--21653421
பக்தகோ லாகலன், முக்திமூ லாதரன்,
சக்தி உமையாளின் சோதரன், -சித்தி,
வரம்நூறு தந்துந்தன், வாழ்வில் மலர்வான்,
பரணூர் பிரேமிக்காய்ப் பூத்து….(277)

மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக,
கூப்பிடாத காலன் கரம்குலுக்க, -ஆப்பழியும்,
அந்திம நாளேனும், அய்யோ மறவாது,
நந்த குமாரனை நம்பு….(278)

ஆழியை பூமியை, நாழிகை நேரத்தில்,
ஊழியில் உண்டுமிழ்ந்த உத்தமனை, -தாழியுள்,
வெண்ணையை தான்வளர்ந்த, மண்ணையும் உண்ணவரும்,
கண்ணனை நெஞ்சே கருது….(279)

போகமவன் ஐம்புலனில், யோகமவன் மெய்ப்பொருளில்,
தாகமவன் துய்ப்போர் தரத்தினில், -வேகமவன்,
வேண்டும் அடியார்பணிக்கு, பாண்டுமவன் தோழனவன்,
யாண்டுமவன் ஆயர்தம் யாப்பு….(280)

படநச் சரவில், படுத்துறங்கும் அச்சுதன்,
வடபத்ர சாயியாய் வந்தவன், -வெடவெடத்த,
மாரியில் வெற்பெடுத்தாய்ச், சேரியைக் காத்தவன்,
காரிருள் வண்ணன்தாள் காப்பு….(281)

காயில் பழமாகி, நோயில் கிழமாகி,
பாயில் உழல்கின்ற காயத்தை, -ஆயுள்,
முழுதும் சுமந்தேன், முழுமுதலே ஈதுன்,
பழுதன்றோ பாம்பணையோய் பார்….(282)

——————————————————————————————————————

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *