புலிக்கொடியின் மாட்சி
முன்னுரை:
என் பூர்வீகம் தஞ்சாவூர். நான் அங்கு அடிக்கடி போய் அமரும் இடம் தஞ்சை பெரிய கோயில். அருள் மிகு பிரகதீஸ்வரர் கோயில். கல்லிலே கலை வண்ணம் கண்டேன் என் மனதில் அழியா இடம் பெற்ற பேரரசர் திரு ராஜராஜ சோழன். அவரது சரித்திரத்தை ஒரு கவிதை போல எழுத வேண்டும் என்ற ஆவலால் இதை எழுதினேன். எழுதும் போது என் கண் முன் அந்த மன்னரையே கண்டேன். அவர் பின்னால் தஞ்சைப்பெரிய கோயிலும் கம்பீரமாக நின்றது.
அது ஒரு பொற்காலம் ………….
சோழ வள நாடாம், அதில் உயர் தஞ்சைக் கண்டு,
தூயத்தமிழ் நாட்டின் தலைமை அதைக் கொண்டு,
புகழ் உச்சி ஏணியில் புலிக் கொடி நாட்டி,
“அருள் மொழி வர்மனாம்” அருளைக் காட்டி,
சிவனுடைய அருள் முழுமை பெற்று,
ஒவ்வொரு மூச்சிலும் சிவனே நின்று,
கண்டறியாத அற்புதமாய் நின்றது தஞ்சைக் கோவில்
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத கற்கோவில்,
கலை நுட்பம் சிறந்த அழகுத்திருகோயில் ,
கண்டவர் பரவசம், காண்பவர் வியக்கும் கோவில்
பிரும்மாண்ட சிவலிங்கம் அருள் புரியும் கோயில்
அவனைப்பார்க்கும் நந்தியோ மனதை அள்ளும் கோயில்
மலர் மணக்கும் கோவில்கள்
மா பெரும் விழாக்கள்.
ஒன்றுபட்ட மனத்தாலே உழைத்திடும் கரங்கள்,
சாலை இரு புறமும் நிழல் கொடுக்கும் மரங்கள்.
அது ஒரு பொற்காலம், மக்கள் மகிழ்காலம்
அருள்மொழிவர்மன் திரு ராஜராஜன் வாழியவே
ராஜகேசரி வர்மன் நீதானே
மும்முடி சோழன் நீதானே,
சிவபாத சேகரா நீதானே
ஸ்ரீ ராஜராஜனும் நீதானே
சிவனருள் பெற்றவன் நீதானே
தமிழ் நாட்டின் பெருமையும் நீதானே
அது ஒரு பொற்காலம் மக்கள் மகிழ்ந்தக் காலம்
அருள்மொழி வர்மன் திரு ராஜ ராஜன் வாழியவே !
எங்கும் புலிக்கொடியின் மாட்சி கொடிக்கட்டி பறந்தது ஆட்சி
அருளோங்க, ஒளியோங்க மகிழ்வோங்க, வாழ்வோங்க
பொருள் வளம் ஓங்க, புலமை எழில் ஓங்க சிவ நாமம் ஓங்க
மாவீரன் எனப் பெயரோங்க சோழவளநாடு புகழோங்க
நாற்றிசையும் வெற்றிப் பேரிகையும் ஓங்க சீரும் சிறப்புமோங்க,
சொற்சுவையும் பொருட்சுவையும் ஒருங்கே ஓங்க
அயல் நாட்டிலும் செந்தமிழ் ஓங்க,
வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்க
கலைகளும் சுடர் விட காவியமும் பெருகிட,
தாயின் அன்பில் கோவிலும் எழும்பிட,
அரசில் புதுமைகள் தின்ந்தோரும் தோன்றிட,
வைணவமும் மதித்து திருமால் கோவிலும் எழுப்பிட,
‘சூடாமணிவிஹாரா” என்ற புத்தக் கோவிலும் வந்திட,
கங்கைக் கொண்ட சோழபுரமாம் வானளாவ
அது ஒரு பொற்காலம் மக்கள் மகிழ்ந்தக் காலம்
அருள்மொழி வர்மன் திரு ராஜ ராஜன் வாழியவே !
தஞ்சை திருச்சி முதல் ஆட்சி ,
வட ஆற்காட்டிலும் புலிக்கொடி மாட்சி,
பாஸ்கரவர்மனும் தோல்வி கண்டான்,
அமரபுஜங்கனும் மாட்டிக் கொண்டான்,
கண்டலூரிலும் புலிக்கொடி பறக்க
கப்பற்படைகள் தோல்வி அடிக்க,
வில்லினம் துறைமுகம் சோழன் கையில்
எல்லா துறைமுகம் அவன் வசத்தில்
கங்குவர் நொலம்பர் யாவரும் பணிய,
வேங்கி, குடகு எல்லாம் அவன் கீழ்,
தக்கிணத்திலும் “சாலுக்யா
தோல்வி் கண்டான் “சத்யஸ்ரயா ‘
சேர பாண்டியன் உடன்படிக்கை,
இலங்கை அரசனுக்கு உதவும் கை,
சீறி எழுந்தது புலிக்கொடி
எங்கும் பறந்தது வீரக்கொடி ,
அரசன் மஹீந்தரன் தோல்வி,
சோழனின் கொடிக்கு வெற்றி
அது ஒரு பொற்காலம் மக்கள் மகிழ்ந்தக் காலம்
அருள்மொழி வர்மன் திரு ராஜ ராஜன் வாழியவே !
படம் உதவிக்கு நன்றி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTn3wClbq7QjvXHtP1Jkdg8zjtoqlUZz7brRnmxb2T5wnpBqCFF