இலக்கியம்கவிதைகள்

கேள்வி பிறந்தது அன்று!

-சேசாத்ரி பாஸ்கர்

 

எங்கோ பிறந்த தென்றல் எப்படி                            flower
விரிக்க வைத்தது இதழை?
என்றோ புதைந்த விதை
எப்படியாயிற்று
இங்கு மரமாய்?
எங்கோ முகிழ்ந்த வானம் எங்ஙனம்
கொண்டு வரும் மணத்தை?
எங்கேயோ நீரை விழுங்கிய நிலம்
எப்படிக் கொணர்ந்தது குளிர்ச்சி?
என்றோ கரைந்த நினைவுகள் எங்ஙனம்
சுமக்கிறது மனம்?
கேள்வியில் இருப்பது வாழக்கை
யாருக்கு வேண்டும் பதில்?

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க