பொதுவுடைமை!
-சேசாத்ரி பாஸ்கர்
அந்த வயதில் எல்லோரையும் ஈர்த்த வஸ்து
ஆண் பெண் பேதமில்லை
யாருக்கு அதிகம் என்பதில் போட்டி…
எல்லோரும் காத்திருக்கும் இரவு!
வாசம் மூக்கைத் துளைக்கும்
சாப்பிடலாமா?
ரப்பர் பந்துபோல் அம்மா உருட்டும் லாவகம்
யாருக்கு வரும்?
வட்டமாய் அமர்வது வாகு
பங்கு குறையாது
தள்ளி நின்றால் சுண்டக்காய் மிஞ்சும்
கூச்சம் இங்கு அகௌரவம்!
முதல் குப்பி கட்டை விரலுக்கு
பின்னர் எல்லா மந்திரிகளுக்கு
எல்லோர் மனசும் நெருக்கம்
விரல்கள் மட்டும் விலக்கு!
சண்டை போட்ட அக்கா தம்பிக்கு
மூக்கில் சொறியும் அன்பு அமெரிக்கா அறியுமா?
தனித்தனி கனவுகள்
ஆனாலும் எல்லோரும் கூட்டமாய் அதில்தான் வருவர்
வறண்ட குப்பியை விலக்கி நீர் நனைத்து
சிவப்பை நோக்கும் கண்கள்…ஆணாவது பெண்ணாவது
மருதாணி இரு பாலார்க்கும் பொது…!
When you grow old, you still want to have maruthANi at least in your uLLangkAl
As you can not take out the desire from your uLLangaL!
( “viLakkeRRvathu nAn” – rasiththEn)
Su.Ra
நன்றி அண்ணா .இந்த குளத்தில் நீங்கள் எறிந்த கல் இன்னும் வட்டம் காட்டுகிறது .
காம்யூ பற்றி நீங்கள் சொன்னது ,தாய் கதை பற்றி நீங்கள் உருகியது ,கடற்கரை பிரகாஷ் ஓட்டலில் சட்னியில் குறைந்த உப்புக்கு வாதம் செய்தது (Consumer resistance ) என்றதை கேட்டு அன்று எனக்கு இட்லி இறங்கவில்லை சிசுபரன் என அன்பாய் அழைத்தது … காலம் கடக்கவில்லை .